உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..? கவனிக்க வேண்டிய 5 அபாய அறிகுறிகள்..!!

LDL Cholesterol 2025

ஆரோக்கியமான வாழ்வுக்கும், இதயம் சீராக இயங்கவும் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவைச் சரியாகப் பராமரிப்பது மிக அவசியம். நம் இரத்தத்தில் லிப்பிடுகள் அல்லது கொழுப்புகளின் அளவு அதிகரிக்கும்போது கொலஸ்ட்ரால் அதிகமாகிறது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் காட்டாமல் மெதுவாக நம் ஆரோக்கியத்தைச் சிதைக்கும் கொலஸ்ட்ரால், சில சமயங்களில் நாம் அன்றாடம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியின்போதே சில அறிகுறிகள் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறது. சிறிய அறிகுறியாக இருந்தாலும் அதை அலட்சியம் செய்யாமல் கவனிக்க வேண்டியது முக்கியம். அதிக கொலஸ்ட்ரால் இருக்கும்போது நீங்கள் நடக்கும்போது கவனிக்கக்கூடிய முக்கியமான 5 அறிகுறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

மூச்சுத் திணறல் : நடைப்பயிற்சியின்போது அல்லது சிறிதளவு உடல் உழைப்புக்குப் பிறகு மூச்சுத் திணறல் ஏற்படுவது, உடலில் ‘கெட்ட கொழுப்பு’ (LDL) அதிகமாக இருப்பதற்கான முக்கியமான அறிகுறியாக இருக்கலாம். அதிகப்படியான கெட்ட கொலஸ்ட்ரால், ரத்தக் குழாய்களில் கசடுகளை படியச் செய்து, ரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் இதயம் ரத்தத்தை உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செலுத்த அதிக சிரமப்பட வேண்டியுள்ளது. இந்தக் கூடுதல் சிரமமே மூச்சு விடுவதைச் கடினமாக்குகிறது.

கை, கால்களில் குளிர்ச்சி : சாதாரணச் சூழலிலோ அல்லது உடல் செயல்பாடுகளுக்குப் பிறகோ உங்களது கை, கால்கள் வழக்கத்திற்கு மாறாகக் குளிர்ச்சியாக இருக்கிறதா? இது ரத்த ஓட்டம் போதுமான அளவில் இல்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். தமனிகள் சுருங்குவதால், கை கால்களுக்குச் செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. இதனால் குளிர்ச்சியான உணர்வு ஏற்படுகிறது. இந்த அறிகுறியைத் தொடர்ந்து நீங்கள் கவனித்தால், உடனடியாக உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து, கொலஸ்ட்ரால் அளவைச் சோதிப்பது நல்லது.

கால்களில் தசைப்பிடிப்பு மற்றும் வலி : நடக்கும்போது கால்கள், முழங்கால்கள் அல்லது கணுக்கால்களில் ஏற்படும் கடுமையான பிடிப்புகள் மற்றும் வலிகள் அதிக கொலஸ்ட்ராலுடன் தொடர்புடைய புறத் தமனி நோயாக இருக்கலாம். கால்களுக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் கொழுப்புப் படிவுகள் சேர்வதால் இரத்த ஓட்டம் குறைந்து, தசைகளுக்குப் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காமல் வலி, கனத்தன்மை மற்றும் பிடிப்புகள் ஏற்படுகின்றன.

அதீத சோர்வு : அதிகப்படியான உடல் சோர்வு என்பது பலருக்கும் பொதுவான ஒரு பிரச்சனை என்பதால் பலர் இதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால், அதிக கொலஸ்ட்ரால் காரணமாக இதய தசைக்கு இரத்தத்தை வழங்கும் தமனிகளில் கொழுப்புப் படிந்து ரத்த ஓட்டம் குறைவதால், இதயத் தசைக்குச் செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் குறைகிறது. இந்தக் குறைபாடு காரணமாகவே அதீத சோர்வு ஏற்படுகிறது. இது இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதன் மறைமுகமான அறிகுறியாக இருக்கலாம்.

நெஞ்சு வலி : நடக்கும்போது மார்பில் அழுத்தம், இறுக்கம் அல்லது வலி ஏற்படுவது என்பது உங்கள் இதய ஆரோக்கியத்தில் உள்ள பிரச்சனையின் தீவிர எச்சரிக்கை ஆகும். இது புறக்கணிக்கக் கூடாத ஓர் அறிகுறி. உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேர்வது, தமனிகளில் கொழுப்புப் படிந்து சுருங்குவதற்குக் காரணமாகிறது. இதனால் இதயத் தசைக்குத் தேவையான இரத்தம் கிடைக்காமல், ‘ஆஞ்சினா’ எனப்படும் மார்பு வலி ஏற்படுகிறது. உங்களுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.

Read More : உங்கள் வாழ்நாளில் இனி கல்லீரல் பிரச்சனையே வராது..!! இந்த காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கோங்க..!!

CHELLA

Next Post

ஆப்பிள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது தான்; ஆனா தவறுதலாக அதன் விதையை சாப்பிட்டால் மரணம் ஏற்படுமா?

Fri Oct 17 , 2025
உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில், பழங்கள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அந்த வகையில் ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஆப்பிள் சாப்பிடும்போது, ​​சில நேரங்களில் மக்கள் அதன் விதைகளை தவறாக சாப்பிடுகிறார்கள். ஆப்பிளில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் […]
apple seeds side effect

You May Like