எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்த போது திமுக அரசை உருட்டுக் கடை அல்வா என்று விமர்சித்திருந்தார்.. மேலும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி உருட்டுக் கடை அல்வா என்ற பெயரில் ஒரு பாக்கெட்டை கொடுத்தார்.. அதில் பிரித்து பார்த்தால் அல்வாவுக்கு பதில் பஞ்சு தான் இருக்கும்.. அதே போல் தான் திமுக கொடுத்த வாக்குறுதிகளும் என்று விமர்சித்திருந்தார்..
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ சட்டமன்றத்தில், மக்கள் மன்றத்தில் அரசியல் செய்வதை விட்டு விட்டு தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களுக்காக அரசியல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.. அவர் தற்போது திருட்டுக்கடை பழனிசாமியாக இருக்கிறார்..
ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக எப்படி இவர் கைக்கு வந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.. அதிமுக என்ற கம்பெனியை சசிகலாவிடம் இருந்து லீஸுக்கு எடுத்து நடத்த ஆரம்பித்தார்.. பாஜக உடன் சேர்ந்து கொண்டு சசிகலாவை சிறைக்கு அனுப்பிவிட்டு திருட்டுக்கடையை கைப்பற்றினார். பின்னர் டிடிவி தினகரனை ஏமாற்றி அவரிடம் இருந்து கைப்பற்றினார்.. அதற்கு பிறகு ஓபிஎஸ் உடன் கைக்கோர்த்து 5 வருடம் ஓட்டினார். பின்னர் அவரையும் ஏமாற்றினார்.. முதலில் ஐவர் அணியை வைத்திருந்த அவர் பின்னர் இருவர் அணியை மட்டும் வைத்திருந்தார்.. இப்படி அதிமுகவை திருட்டுக்கடை போல நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி திமுகவை பார்த்து உருட்டுக்கடை என்று சொல்கிறார்..
திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மறைத்துவிட்டு, நீட் ஏன் ரத்தாகவில்லை? என கேட்கிறார்.. எதை எல்லாம் உண்மையோ அதை மறைத்துவிட்டு பொய்யை மட்டும் பேசிவருகிறார்.. பெண்களுக்கு செல்போன் தருவதாக கூறிவிட்டு அதனை நிறைவேற்றவில்லை.. இப்படி அதிமுக கொடுத்த உருட்டு நிறைய உள்ளது.
ஆனால் தமிழ்நாடு முதல்வர் வழங்கிய விடியல் பயணத்திட்டத்தை அண்டை மாநிலங்களில் அமல்படுத்துகின்றனர்.. இங்கே வரும் முதலமைச்சர்கள் தமிழக முதல்வரின் திட்டங்கள் என்று சிறப்பான திட்டங்கள் என்று கூறுகின்றனர்.. இபிஎஸ்-க்கு சேர்க்கை சரியில்லை.. ஃபாலோயர்களை அதிகப்படுத்த தற்போது ஒரு பேட்டியை கொடுத்திருக்கிறது.. இந்த திமுக 75 ஆண்டுகால வரலாறு கொண்ட இயக்கம்.. இந்த திமுகவை எள்ளி நகையாடுவதால் நீங்கள் பெரியாளாக ஆகிவிட முடியாது.. இது எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பார்த்த இயக்கும்.. எடப்பாடி பழனிசாமி எல்லாம் எம்மாத்திரம்? எடப்பாடி பழனிசாமி திமுகவை எள்ளி நகையாடும் வேலை இத்துடன் நிறுத்துக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்..



