fbpx

வீட்டிற்கு சோலார் பேனல்கள்..!! இனி ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் பொருத்தலாம்..!! எப்படி தெரியுமா..?

சோலார் பேனல்கள் பொருத்தி மின்சக்தியை தயாரித்து பயன்படுத்துவது என்பது மின்சாரத்திற்கு ஆகும் செலவை வெகுவாக குறைக்கிறது. மேலும், சோலார் பேனல்கள் பொருத்துவதன் மூலம் நமது தேவைக்கேற்ப மின்சாரத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும். சோலார் பேனல்களை பொருத்துவதில் உள்ள முக்கிய பிரச்சனையே அவற்றை வீடுகளில் பொருத்துவதற்கு ஆகும் செலவுதான்.

குறிப்பாக அதிக அளவிலான சோலார் பேனல்களை ஒரே நேரத்தில் இன்ஸ்டால் செய்யும்போது அதற்கு ஆகும் செலவும் அதிகமாகும். இந்த பிரச்சனை சரி செய்வதற்காகத்தான் சந்தையில் தற்போது புதியதோர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். உங்கள் வீட்டில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கு நீங்கள் திட்டமிட்டிருந்தார்ல், இலவசமாகவே பொருத்தி தரப்படும். அதற்கு உங்களிடம் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. அதே சமயத்தில் ஒவ்வொரு மாதமும் நீங்கள் சூரிய சக்தியை கொண்டு உருவாக்கி பயன்படுத்தும் மின்சாரத்திற்காக கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும். இந்த சேவையை ரெஸ்கோ (RESCO) என்ற நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்த ரெஸ்கோ நிறுவனமானது வாடிக்கையாளரின் வீட்டில் சோலார் பேனல்கள் பொருத்துவதற்கான வேலையை பார்த்துக் கொள்ளும். இதற்கான முதலீட்டை 3-ஆம் தரப்பு நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். ரெஸ்கோ நிறுவனத்தின் முக்கிய வேலையே சோலார் பேனல்கள் சரியாக பொருத்தப்பட்டு சரியாக வேலை செய்வதை மேற்பார்வையிடுவது தான். இதற்கான மொத்த பொறுப்பும் ரெஸ்கோ உடையது. இதில் வாடிக்கையாளர்கள் ஒரு ரூபாய் கூட முதலீடு செய்ய தேவையில்லை. சோலார் பேனல்களை இன்ஸ்டால் செய்த பிறகு அவர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு மட்டும் அவர்கள் கட்டணம் செலுத்தினால் போதுமானது.ப்

சோலார் பேனல்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ.3.23 மானிய விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் நிறுவனத்தால் ஓராண்டுக்கு குறைந்தபட்சமாக 1,250 யூனிட் மின்சாரம் வழங்கப்படும். ஒருவேளை 1,250 யூனிட்டுக்களுக்கு குறைவான மின்சாரம் ஒரு ஆண்டுக்கு பயன்படுத்தப்பட்டால் நுகர்வோருக்கு அதற்கான அபராதம் அவர்கள் பயன்படுத்திய யூனிட்டுகளின் அடிப்படையில் வசூலிக்கப்படும்.

Chella

Next Post

எடப்பாடி பழனிசாமி மீது பாய்கிறது நடவடிக்கை..? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Tue Nov 28 , 2023
அதிமுக அலுவலகம் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையில் முகாந்திரம் இருந்தால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுக அலுவலகத்தை தாக்கி, அங்கிருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது சிபிசிடிக்கு மாற்றப்பட்டது. அதேபோல அன்றைய தினம் அதிமுக அலுவலகத்தில் […]

You May Like