fbpx

எடப்பாடி பழனிசாமி மீது பாய்கிறது நடவடிக்கை..? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

அதிமுக அலுவலகம் தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையில் முகாந்திரம் இருந்தால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்ற போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அதிமுக அலுவலகத்தை தாக்கி, அங்கிருந்த ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கானது சிபிசிடிக்கு மாற்றப்பட்டது.

அதேபோல அன்றைய தினம் அதிமுக அலுவலகத்தில் தங்களை எடப்பாடி அணி குண்டர்கள் தாக்கியதாக ஓபிஎஸ் ஆதாரவாளரான ஜேடிசி பிரபாகரன் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம், டி.நகர் சத்யா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட கோரி ஜேடிசி பிரபாகரன் சென்னை ஐகோர்ட்டிலும் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இது தொடர்பாக விசாரணை நடத்தி முகாந்திரம் இருந்தால் 2 வாரங்களில் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

Chella

Next Post

இலவச பயிற்சி வகுப்பு... விண்ணப்பிக்க நாளை தான் கடைசி...! TRB தேர்வர்கள் மிஸ் பண்ணிடாதீங்க...!

Wed Nov 29 , 2023
தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் தேர்விற்கு (http://www.trb.tn.gov.in) என்ற இணையதளம் […]

You May Like