கடந்த 4 ஆண்டுகளாக தமிழக பாஜக மாநில தலைவராக அண்ணாமலை இருந்து வந்தார்.. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு மாநில பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு, அவருக்கு பதில் நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார்.. அப்போது அண்ணாமலை தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று அமித்ஷா கூறியிருந்தார்.. ஆனால் தற்போது வரை அண்ணாமலைக்கு வேறு எந்த பொறுப்புகளும் வழங்கப்படவில்லை..

எனவே அண்ணாமலை – நயினார் இடையே பனிப்போர் நடந்து வருவதாகவே கூறப்படுகிறது.. நயினார் ஒரு கருத்தை சொன்னால் அதற்கு நேர்மாறாக அண்ணாமலை மற்றொரு கருத்தும் சொல்லி வருகிறார்..
இந்த நிலையில் தனது பெயரில் யாரும் நற்பணி மன்றம் அமைத்தது குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.. தனது பதிவில் “ அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு, வணக்கம். இன்றைய தினம், திருநெல்வேலியில், எனது பெயரில் நற்பணி மன்றம் அமைத்து, கொடி அறிமுகம் செய்துள்ளதாக, ஊடகங்களில் வந்த செய்தி கண்டேன். நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன்.
எனினும், இது போன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, தயவுசெய்து, என் பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தும் இது போன்ற செயல்பாடுகளை உடனடியாகக் கைவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். வருங்காலத்திலும், இது போன்ற செயல்பாடுகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
சுவர் இருந்தால்தான் சித்திரம். எனவே, அனைவரும் முதலில், உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆதரவுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்.” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : “அதிமுகவை திருட்டுக்கடை போல் நடத்தும் பழனிசாமி..” உருட்டுக்கடை திமுக விமர்சனத்திற்கு அமைச்சர் பதிலடி..