பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா இனி அமைதியாக இருக்காது, மாறாக சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் பதிலளிக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் நடந்த ஆங்கில ஊடக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அப்போதுஅவர் பேசியதாவது, முந்தைய அரசாங்கங்கள் கட்டாயத்தின் பேரில் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினாலும், தனது அரசாங்கம் அவற்றை உறுதியுடன் பின்பற்றி வருவதாகவும், ஒவ்வொரு ஆபத்தையும் சீர்திருத்தங்களாக மாற்றியுள்ளதாகவும் கூறினார். பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா இனி அமைதியாக இருக்காது, மாறாக சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் பதிலளிப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
“பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா இனி அமைதியாக இருக்காது, மாறாக வான்வழித் தாக்குதல்கள், சர்ஜிக்கல் தாக்குதல்கள் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுக்கிறது. போர்கள் உலகளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தாலும், வேகமாக வளரும் பொருளாதாரமாக உருவெடுப்பதன் மூலம் இந்தியா அதன் விமர்சகர்களை தவறாக நிரூபித்துள்ளது” என்று பிரதமர் கூறினார்.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்தியாவை யாரும் தடுக்கமுடியாது. பல சவால்களில் இருந்து இந்தியா மீண்டுள்ளது. 140 கோடி இந்தியர்களும் முன்னேறிச் செல்கின்றனர். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு துறையில் கூகுள் நிறுவனம் நுழைந்துள்ளது. தற்போது இந்தியா உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. சிப்ஸ் முதல் கப்பல்கள் வரை, இந்தியா ஒவ்வொரு துறையிலும் தன்னிறைவு மற்றும் நம்பிக்கையுடன் உள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.
டிஜிட்டல் பரிமாற்றத்தில் இந்தியாவின் யுபிஐ ஆதிக்கம் செலுத்துகிறது. இன்று உலகின் 50 சதவீத டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் இந்தியாவில் நடக்கிறது. 2014-ம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவின் மக்கள் தொகையில் பாதிபேருக்கு வங்கிக்கணக்கு இல்லை. நாங்கள் வங்கி அமைப்பை சீரமைத்ததுடன் 50 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளோம் என தெரிவித்தார்.
Readmore: மொசாம்பிக் படகு விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு!. 5 பேரை காணவில்லை!. மீட்பு பணிகள் தீவிரம்!.



