பெரியார் உலகம் – திமுக எம்.பி, எம்.எல்.ஏக்களின் 1 மாத ஊதியத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

tn cm mks

திருச்சி அருகே, சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில், திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில், 27 ஏக்கர் பரப்பளவில் ‘‘பெரியார் உலகம்’’ உருவாகி வருகிறது.. தந்தை பெரியார் 95 அடி உயர பெரும் சிலை, 60 அடி பீடம், பீடத்திற்குள்ளேயும், வெளியேயும் நூலகம், திராவிட ஆய்வகம், குழந்தைகள் அறிவுப் பூங்கா, பார்வையாளர்களுக்குரிய உணவகச் சேவைகள், விரிவான ஆய்வகம், அருங்காட்சியம் என பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது.


இந்த பெரியார் உலகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட உள்ளது.. இந்த நிலையில் பெரியார் உலகத்துக்கு ரூ.1.70 கோடியை முதலமைச்சர் வழங்கி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி – சிறுகனூரில் அமையும் “பெரியார் உலக”த்துக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-ஐ தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
அவர்களிடம் வழங்கினேன்! பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்!” என்று பதிவிட்டுள்ளார்.

Read More : டாஸ்மாக் விவகாரம்.. ஆகாஷ் பாஸ்கரன் தொடர்ந்த வழக்கு.. அமலாக்கத்துறை ஆணையர் ஆஜராக உத்தரவு!

RUPA

Next Post

இனி ரயில்களில் வண்ணமயமான ஜெய்ப்பூர் போர்வைகள் வழங்கப்படும்.. இந்திய ரயில்வேயின் புதிய திட்டம்..

Sat Oct 18 , 2025
இந்தியாவில் இனி ரயில் பயணங்கள் கொஞ்சம் வண்ணமயமாகவும், மிகவும் வசதியாகவும் மாறவுள்ளன. ஏசி பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு ராஜஸ்தானின் வளமான ஜவுளி பாரம்பரியத்தை எடுத்துக்காட்டும் பாரம்பரிய சங்கனேரி பிரிண்ட் அலங்கரிக்கப்பட்ட போர்வைகளை வழங்கும் ஒரு புதிய முயற்சியை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. இந்த திட்டம் ஜெய்ப்பூரின் கதிபுரா ரயில் நிலையத்தில் ஒரு சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்டது, மேலும் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் சோதிக்கப்படும். தூய்மை குறித்து […]
sanganeri print covers for train blankets 1

You May Like