Flash : கரூர் துயரம்.. தவெகவினர் யாரும் தீபாவளி கொண்டாட வேண்டாம்.. விஜய் அறிவுறுத்தல்..

vijay n

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தவெகவினர் யாரும் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று தவெக தலைமை அறிவுறுத்தி உள்ளது.

கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இதுகுறித்து தமிழக அரசு அமைத்த ஒரு நபர் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்து வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.


ஆனால் விஜய் ஏன் இன்னும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.. இந்த சூழலில் கரூர் சம்பவம் தொடர்பாக 20 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார்.. அதன்படி அவர்கள் கரூரில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து கூறினர்.. அப்போது தான் விஜய் வீடியோ காலில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது கரூர் செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.. ஆனால் விஜய் கரூர் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.. மேலும் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு அழைத்து வந்து ஆறுதல் சொல்லி நிதியுதவியை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன..

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தவெகவினர் யாரும் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று தவெக தலைமை அறிவுறுத்தி உள்ளது.. தவெக நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்.. அதன்படி, தலைவர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் தவெக சார்பில் யாரும் தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டாம் என்று ஆனந்த் அறிவுறுத்தி உள்ளார்..

Read More : Flash : அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது.. வானிலை மையம் முக்கிய தகவல்!

RUPA

Next Post

‘பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும், பிரம்மோஸ் வரம்பில் இருக்கு.. ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரெய்லர் தான்’: ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

Sat Oct 18 , 2025
பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் வரம்பில் உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள பிரம்மோஸ் விண்வெளிப் பிரிவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுதியை கொடியசைத்து தொடங்கி வைத்த பிறகு, ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். அப்போது ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப் படைகள் பெற்ற வெற்றியைப் பாராட்டினார், ஆனால் அது வெறும் […]
rajnath singh

You May Like