கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது..
கடந்த 27-ம் தேதி கரூரில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையுமே உலுக்கியது.. இதையடுத்து கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தவெக சார்பில் ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்திருந்தார்.. மேலும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது..
ஆனால் விஜய் ஏன் இன்னும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது.. இந்த சூழலில் கரூர் சம்பவம் தொடர்பாக 20 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார்.. அதன்படி அவர்கள் கரூரில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து கூறினர்.. அப்போது தான் விஜய் வீடியோ காலில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது கரூர் செல்ல விஜய் திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது.. விஜய் நிவாரணம் வழங்க சரியான இடம் கிடைக்காததால் அவர் அங்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.. ஆனால் விஜய் கரூர் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகிறது.. மேலும் கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை பனையூருக்கு அழைத்து வந்து ஆறுதல் சொல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கிலும் ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் கரூர் செல்ல முடியாததால் நிவாரண தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது..
Read More : 1 மாதம் முன்னதாகவே ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்..!



