ISRO-வில் வேலை பார்க்க ஆசையா..? ரூ. 1,77,500 சம்பளம்.. 141 காலிப்பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பிங்க..

ISRO 2025

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் 141 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.


காலிப்பணியிடங்கள்:

  • விஞ்ஞானி/பொறியாளர் – 23
  • டெக்னிக்கல் உதவியாளர் – 28
  • அறிவியல் உதவியாளர் – 3
  • நூலக உதவியாளர் – 1
  • நர்ஸ் – 1
  • ரேடியோகிராப்பர் – 1
  • டெக்னீஷியன் – 70
  • வரைவாளர் – 2
  • சமையல்காரர்/தீயணைப்பு/ஓட்டுநர் – 12

சம்பள விவரம்:

விஞ்ஞானி / பொறியாளர்: ரூ. 56,100 – ரூ. 1,77,500

  • இவை மிஷின் டிசைன், தொழிற்சாலை பொறியியல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், அட்மாஸ்பியர் சயின்ஸ், மெட்ரோலார்ஜிக்கல், அனலிட்டிக்கல் கெமிஸ்டி, கெமிக்கல் பொறியியல் போன்ற பிரிவுகளில் வழங்கப்படும்.

டெக்னிக்கல் உதவியாளர்: ரூ. 44,900 – ரூ. 1,42,400

  • கெமிக்கல், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலெக்ட்ரிக்கல், சிவில், கணினி அறிவியல், கம்யூனிகேஷன் போன்ற பொறியியல் துறைகளுக்கு.

அறிவியல் உதவியாளர்: ரூ. 44,900 – ரூ. 1,42,400

  • வேதியியல், கணினி அறிவியல், நுண்கலை/காட்சிக்கலை போன்ற துறைகளுக்கு.

நூலக உதவியாளர் / நர்ஸ்: ரூ. 44,900 – ரூ. 1,42,400

  • நூலக அறிவியல் அல்லது மருத்துவ சம்பந்தப்பட்ட தகுதிகள் கொண்டவர்களுக்கு.

ரேடியோகிராப்பர்: ரூ. 25,500 – ரூ. 81,100

டெக்னீஷியன்: ரூ. 21,700 – ரூ. 69,100

  • ITI / NAC / NTC தகுதிப்பெற்றவர்கள்.

வரைவாளர்: ரூ. 21,700 – ரூ. 69,100

சமையல்காரர் / தீயணைப்பு வீரர் / ஓட்டுநர்: ₹19,900 – ₹63,200

வயது வரம்பு:

* விஞ்ஞானி பதவிக்கு 18 – 30 வயது வரை இருக்கலாம்.

* டெக்னிக்கல் உதவியாளர், அறிவியல் உதவியாளர், நூலக உதவியாளர், ரேடியோகிராப்பர், வரைவாளர், சமையல்காரர், ஓட்டுநர், நர்ஸ் ஆகிய பதவிக்கு 18 முதல் 35 வயது வரை இருக்கலாம்.

* தீயணைப்பு வீரர் பதவிக்கு 18 முதல் 25 வயது வரை இருக்கலாம் .

கல்வித் தகுதி: பதவிக்கு ஏற்ப பிஎ/மாஸ்டர், டிப்ளமோ, ITI/NAC, 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அனுபவம் ஆகியவை தேவை.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு.

தேர்வு மையங்கள்: சென்னை, திருநெல்வேலி

விண்ணப்பிப்பது எப்படி? தகுதியுள்ள இளைஞர்கள் https://apps.shar.gov.in/sdscshar/result1.jsp என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.750 வசூலிக்கப்படுகிறது.

Read more: உங்க வீட்ல ஃப்ரிட்ஜ் இருக்கா..? இந்த தப்பையெல்லாம் பண்ணிடாதீங்க..! – நிபுணர்கள் எச்சரிக்கை..

English Summary

Interested in working at ISRO? 141 vacancies.. Rs. 1,77,500 salary..! Apply now..

Next Post

மகளிர் உரிமை தொகை.. தீபாவளிக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக அரசு..!! லிஸ்ட் ரெடியாகுது மக்களே..

Sun Oct 19 , 2025
Women's rights amount.. Tamil Nadu government gave a sweet surprise for Diwali..!
magalir urimai thogai 2025

You May Like