உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், ஃபேஸ்புக் மூலம் போலி அடையாளத்துடன் அறிமுகமான இளைஞர் ஒருவர், இளம் பெண்ணை ஏமாற்றி உறவு கொண்டதாக கூறி, அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், “25 வயதான நியாஸ் அகமது கான் என்பவர், ஃபேஸ்புக்கில் தன்னை ‘பேபி ராஜா’ என்ற புனைப்பெயருடன், இந்து இளைஞராக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். இதையடுத்து, 23 வயதான கீர்த்தி சிங் (பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண்ணுடன் 2 ஆண்டுகளாக உறவில் இருந்துள்ளார். இதனால், இவர்கள் இருவரும் உடலுறவு வைத்துள்ளனர்.
இந்நிலையில், கான்பூரில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் அறையில் இருவரும் இருந்தபோது, கீர்த்தி சிங் தற்செயலாக அந்த இளைஞரின் ஆதார் அட்டையைப் பார்த்துள்ளார். அதில், அவரின் உண்மையான பெயர் நியாஸ் அகமது கான் என்றும், அவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி, உடனடியாக அங்கிருந்து வெளியேறி அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரில், ”அவர் தனது மத அடையாளத்தை மறைத்து தன்னை ஏமாற்றியதாகவும், உணர்ச்சி ரீதியாகவும் உடல் ரீதியாகவும் தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது வெளிப்படையான மோசடி மற்றும் ‘லவ் ஜிகாத்’ தந்திரம்” என்று கீர்த்தி சிங் குற்றம் சாட்டியுள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் நியாஸ் அகமது கானை உடனடியாக கைது செய்தனர்.
இதுகுறித்து கான்பூர் போலீஸ் கமிஷனர் ராஜீவ் குப்தா பேசுகையில், “இந்த வழக்கு சமூக வலைதளங்களில் ஏற்படும் ஏமாற்றங்களின் ஆபத்தை வெளிப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” என்று தெரிவித்தார். இந்தச் சம்பவம், சமூக வலைத்தளங்களில் போலி அடையாளங்களுடன் உருவாகும் உறவுகள் குறித்துப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
Read More : “திமுக கூட்டணி வேண்டாம்”..!! விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேச்சு..!!



