fbpx

தண்ணி குடிச்சது ஒரு தப்பா?… பட்டியலின இளைஞரை அடித்தே கொன்ற மக்கள்!… உ.பி.யில் கொடூரம்!

உத்தரப்பிரதேசத்தில் பொதுக்குழாயில் தண்ணீர் குடித்த பட்டியலின இளைஞரை, அப்பகுதி மக்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் கமலேஷ். 24 வயது இளைஞரான இவர், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இவர், கடந்த நவம்பர் 27ஆம் தேதி, அங்குள்ள பொதுக் குழாயில் ஒன்றில் தண்ணீர் குடித்துள்ளார். இதை அப்பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சார்ந்த சூரஜ் ரத்தோர் மற்றும் அவரது கூட்டாளிகள் பார்த்துள்ளனர். பின்னர், அந்தக் குழாயில் கமலேஷ் தண்ணீர் குடித்ததற்காக அவரை தடியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த கமலேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இதுகுறித்து கமலேஷின தந்தை அளித்த புகாரின்பேரில் சூரஜ் ரத்தோர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சாதிய ரீதியான அடக்குமுறைகள் தொடர்ந்து அரங்கேற்றப்படுவது வேதனை அளித்து வரும் நிலையில், உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் பொதுக்குழாயில் தண்ணீர் குடித்ததற்காக இதர சமூகத்தினரால் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

இந்த 'ஸ்பேம்' (Spam) கால்கள் வந்தாலே எரிச்சலா இருக்கா.? கவலை வேண்டாம்.! இதோ ஈஸி ட்ரிக்.!

Thu Nov 30 , 2023
ஸ்மார்ட் போன் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய தொந்தரவுகளில் ஒன்று ஸ்பேம் அழைப்புகள். இவை பெரும்பாலும் டெலி மார்க்கெட்டர்களிடமிருந்து விற்பனை தொடர்பான அழைப்புகளாக இருக்கும். அல்லது மோசடி கும்பல்களும் இந்த அழைப்புகளை பயன்படுத்தி பயனர்களை ஏமாற்ற நினைக்கலாம் அனேகமான அழைப்புகள் மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரம் தொடர்புடையதாக இருக்கும். சில அழைப்புகள் மோசடி நபர்களும் பயன்படுத்துவது உண்டு. இது போன்ற அழைப்புகள் பெரும்பாலும் எரிச்சலை ஏற்படுத்துபவையாக இருக்கும். இது போன்ற […]

You May Like