கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருந்தால் அது அந்த குடும்பத்திற்கு மட்டுமல்லாது அவர்களது உடல் நலத்திற்கும் பல்வேறு நன்மைகளை கொடுக்கும் என சைக்காலஜி கூறுகின்றது. கணவன் பால் போல் என்றால் மனைவி அதில் கலக்கப்படும் தண்ணீர் போல இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையேயான உறவில் பேணப்படும் அன்பு மற்றும் நெருக்கம் பல்வேறு விதமான நன்மைகளை தருவதாக சைக்காலஜி தெரிவிக்கிறது. பிரபல மனோதத்துவ நிபுணர்களும் கணவன் மற்றும் மனைவி இடையே நிலவும் ஆரோக்கியமான நட்பு மற்றும் உறவு அவர்களது உடல் ஆரோக்கியத்திலும் மன ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கின்றனர்.
கணவனோ அல்லது மனைவியோ தங்கள் பணி நிமித்தமாக வீட்டை விட்டு வெளியே செல்லும்போது தங்களது இணையருக்கு கொடுக்கும் முத்தத்தில் ஏராளமான நன்மைகள் இருப்பதாக சைக்காலஜி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த முத்தம் கொடுப்பதால் அவர்களின் ஆயுள் காலம் ஐந்து வருடம் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கு உளவியல் காரணங்களே முன்னிலை வகிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
1. மேலும் கணவன் அல்லது மனைவி தங்களது இணையருக்கு வெளியே செல்லும் முன் முத்தம் கொடுத்து விட்டு செல்லும்போது அவர்களது வருமானம் 25 லிருந்து 30 சதவீதம் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2. இவர்களுக்கு நோய் தாக்கும் அபாயமும் மிகக் குறைவாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 3. சில வருடங்கள் அவர்களின் ஆயுட்காலம் நீடிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.