சென்னையை குறிவைத்த கனமழை..!! 4 நாட்களுக்கு தரமான சம்பவம் இருக்கு..!! வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

Rain 2025

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் நகர்வில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு விலகியதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். அவர் அளித்த சமீபத்திய தகவல்படி, டெல்டா மாவட்டங்களை பொறுத்தவரை இன்றிரவு (அக். 22) ஒருநாள் மட்டும் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதனைத் தொடர்ந்து, காவிரி படுகை மாவட்டங்களில் மழைப்பொழிவு படிப்படியாக குறையத் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேசமயம், வட கடலோர மாவட்டங்களான சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இன்று (அக். 22) முதல் வரும் 25-ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு நீடிப்பதாக வானிலை ஆய்வாளர் ஹேமசந்தர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், டெல்டாவை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்பட்ட மழைப் பொழிவு, புயல் நகர்வு மாற்றம் காரணமாக தலைநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் மையம் கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

Read More : இனி பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டியது தான்..!! 60 லிட்டர் தண்ணீர் ஊற்றினால் 900 கிமீ வரை காரில் பயணிக்கலாம்..!!

CHELLA

Next Post

ட்ரம்பின் தீபாவளி தொலைபேசி அழைப்பிற்கு பிரதமர் மோடி பதில்.. என்ன சொன்னார் தெரியுமா?

Wed Oct 22 , 2025
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தீபாவளி வாழ்த்துக்களுக்கும், தொலைபேசி அழைப்புக்கும் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீடித்த கூட்டாண்மையை பிரதமர் மோடி வலியுறுத்தினார், இரு நாடுகளையும் “2 சிறந்த ஜனநாயக நாடுகள்” என்று விவரித்தார். வெள்ளை மாளிகையில் தீபாவளியை கொண்டாடிய டிரம்ப், பிரதமர் மோடியை “சிறந்த நண்பர்” என்று பாராட்டிய போது இந்த பரிமாற்றம் நடந்தது. தீபாவளி வாழ்த்துக்களுக்கு ட்ரம்பிற்கு பிரதமர் மோடி நன்றி […]
Trump modi 2025

You May Like