fbpx

கூட்டுறவு சங்கங்களில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! உடனே முந்துங்கள்..!!

தமிழ்நாட்டில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு 2,257 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதற்கான அறிவிப்பை கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தற்போது செயலர், உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர் போன்ற 2,257 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வி தகுதி : இளங்கலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். ராணுவத்தில் பணி புரிந்தவர்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடிந்தால் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி/ எஸ்.டி/ பி.சி/ எம்.பி.சி/ பி.சி.எம் உள்ளிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு இல்லை.

சம்பளம் : கூட்டுறவு சங்கங்களுக்கு ஏற்ப சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 24.12.2023

விண்ணப்பிக்கும் முறை : https://www.drbkrishnagiri.net/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் : ரூ. 500

விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.12.2023

மேலும் விவரங்கள் அறிய, https://cooperativercs.s3.ap-south-1.amazonaws.com/Notification/10_Notification_1.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

Chella

Next Post

தமிழகத்தில் 37 லட்சம் பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு...! மத்திய அமைச்சர் தகவல்...!

Fri Dec 1 , 2023
இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதன் மூலம் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை சமையலறை புகையிலிருந்து விடுவிக்கும் மத்திய அரசின் மகத்தான உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 37 லட்சம் குடும்பங்கள் பயனடைந்திருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 58 இடங்களில் தொடங்கப்பட்ட மோடி உத்தரவாத யாத்திரையின் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் வட்டத்தில் உள்ள மின்னல் சித்தாமூர் கிராமத்தில் நேற்று […]

You May Like