FLASH | சென்னையில் அடுத்த பயங்கரம்..!! 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! பெரும் பரபரப்பு..!!

new bomb

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், முக்கிய இடங்கள் மட்டுமின்றி, பள்ளிகள் மற்றும் விமான நிலையங்களுக்குச் சமூக ஊடகங்கள் வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுவது அதிகரித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னையில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னையை ஒட்டியுள்ள செவ்வாபேட்டை, பருத்திப்பட்டு மற்றும் திருமழிசை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 3 பள்ளிகளுக்கு மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த தகவல் கிடைத்தவுடன், வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மிரட்டலுக்கு உள்ளான 3 பள்ளிகளுக்கும் விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் பல மணி நேரம் நடைபெற்ற இந்த முழுமையான சோதனைக்குப் பிறகு, பள்ளிகளில் எந்தவிதமான வெடிபொருட்களோ அல்லது சந்தேகப்படும் பொருட்களோ இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என்று தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஆவடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பதைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Read More : தலை தீபாவளி முடிந்து உடனே வேலைக்கு போக துடித்த கணவன்..!! தூக்கில் தொங்கிய மனைவி..!! சிவகங்கையில் சோகம்..!!

CHELLA

Next Post

Flash : குட்நியூஸ்.. தொடர் சரிவில் தங்கம் விலை.. 2 நாட்களில் ரூ.3,720 குறைந்ததால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!

Thu Oct 23 , 2025
Gold prices in Chennai today fell by Rs. 320 per sovereign and are being sold for Rs. 92,000.
gold jewlery

You May Like