தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அது வலுவடையவில்லை.. மேலும் இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்துள்ளது..
இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாக என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகரும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுமா என்பது தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதனிடையே இன்று 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..
நாளை, கோவை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.. வரும் 25-ம் தேதி கனமழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.. வரும் 26-ம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.. வரும் 27-ம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : மத்திய அரசின் BEL நிறுவனத்தில் வேலை.. பொறியியல் படித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்..!! உடனே விண்ணப்பிங்க..



