Flash : மோன்தா புயல் கரையை கடக்கும் இடம் அறிவிப்பு.. மணிக்கு 90 – 100 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும்.. வானிலை மையம் வார்னிங்!

Montha Cyclone

தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. இது தொடர்ந்து மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அக்.27-ம் தேதி தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில் இது புயலாக வலுப்பெறும்.. மோன்தா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. மேலும் கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் 970 கி.மீ கிழக்கு, தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.. மேலும் அந்த அறிக்கையில் “ கடந்த 3 மணி நேரத்தில் மணி 7 கி.மீ வேகத்தில் மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது.. ஆந்திராவின் காக்கி நாடா அருகே மோன்தா தீவிர புயலாக கரையை கடக்கும்.. அக்டோபர் 28-ம் தேதி மசூலிப்பட்டினம் – கலிங்கபட்டினம் இடையே இந்த புயல் கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. புயல் கரையை கடக்கும் போது 90 – 100 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : இனி ஆதார் அலுவலகத்திற்கு செல்லாமலே விவரங்களை அப்டேட் செய்யலாம்.. விரைவில் e-Aadhaar அறிமுகம்..!

RUPA

Next Post

போர், ஏலியன்கள், உலகளாவிய அதிகார மாற்றம்.. பாபா வங்காவின் 2026-க்கான பகீர் கணிப்புகள்..!

Sat Oct 25 , 2025
2026 ஆம் ஆண்டு நெருங்கி வருகிறது.. இந்த சூழலில் “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படும் பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்காவின் திகைப்பூட்டும் கணிப்புகள் வெளியாகி உள்ளது.. அதன்படி 2026 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள் உலகளாவிய எழுச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் ஏலியன்கள் மனிதர்களுடன் தொடர்பு கொள்வார்கள் என பல்வேறு நிகழ்வுகளை கணித்துள்ளார்.. மேற்கத்திய நாடுகளை பேரழிவிற்கு உட்படுத்தும் போர்: பாபா வங்காவின் மிகவும் ஆபத்தான கணிப்புகளில் ஒன்று, கிழக்கில் தோன்றும் […]
Baba Vaanga 2025

You May Like