அன்புமணியை தூக்கிவிட்டு தனது மகளுக்கு ராமதாஸ் புதிய பதவி…!

PMK anbumani 2025

பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக, தனது மகள் ஸ்ரீகாந்தியை ராமதாஸ் அறிவித்தார்.


பாட்டாளி மக்கள் கட்சியின் தருமபுரி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ தலைமை வகித்தார். கூட்டத்தில் பேசிய ராமதாஸ்: கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தருமபுரி மண்ணில் 4 பேருடன் தொடங்கப்பட்ட பாமக இன்று மாநிலம் முழுவதும் வளர்ந்து நிற்கிறது. இந்தக் கட்சியின் ஓய்வறியா உழைப்பாளியாக ஜி.கே.மணி பணியாற்றுகிறார். சட்டப் பேரவையில் மக்களுக்காகவும், தொகுதிக்காகவும் பேசுகிறார்.

அதனால் தான் அவரை 4 முறை நீங்கள் எம்எல்ஏ-வாக தேர்வு செய்தீர்கள். பாமக-வின் இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு தருமபுரி மாவட்டத்துக்கு முதல் முறையாக வந்துள்ளார். அவர் தருமபுரிக்கு மட்டுமல்ல தமிழகத்துக்கே பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவார்.

பெருமைக்குரிய தருமபுரி மண்ணில் இருந்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுகிறேன். பாமக-வின் செயல் தலைவர் பதவி காலியாக உள்ளது. அதை அவர் (அன்புமணி) ஏற்கவில்லை. எனவே, பாமக-வின் செயல் தலைவராக ஸ்ரீகாந்தி பரசுராமனை அறிவிக்கிறேன். ஸ்ரீகாந்தி, பாமக-வுக்கும் எனக்கும் பாதுகாப்பாக இருப்பார் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

தங்கத்தை இப்படி விற்றால் கூட வரி செலுத்தணுமா..? மக்களே இது தெரியாம இந்த தவறை செய்யாதீங்க..!!

Sun Oct 26 , 2025
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு முதலீட்டாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், தங்கத்தின் விலை சுமார் 60% அதிகரித்துள்ளதுடன், வெள்ளியின் விலையும் இரண்டு மடங்காக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பலரும் தங்கள் முதலீடுகளை இந்த விலைமதிப்பற்ற உலோகங்கள் பக்கம் திருப்பியுள்ளனர். இருப்பினும், மற்ற சொத்துகளைப் போலவே தங்கம் மற்றும் வெள்ளி முதலீடுகளுக்கும் வரி விதிமுறைகள் பொருந்தும் என்பதை முதலீட்டாளர்கள் அவசியம் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் […]
gold necklace from collection jewellery by person 1262466 1103

You May Like