FLASH | 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! மாணவர்களுக்கு விடுமுறையா..? அறிவிப்பு வராததால் குழப்பம்..!!

Rain 2025 1

மோந்தா (Montha) புயலின் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்த்தனர்.


ஆனால், தற்போது வரை மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் எந்தவிதமான விடுமுறை அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனால், பள்ளிக்குச் செல்ல வேண்டுமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளனர்.

மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட நிர்வாகம் விரைந்து முடிவெடுத்து தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனப் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read More : தமிழ்நாட்டில் 311 அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பூஜ்ஜியம்..? விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பள்ளிக்கல்வித்துறை..!!

CHELLA

Next Post

பெண்கள் வேகமாக எடை அதிகரிப்பது ஏன்..? நிபுணர்கள் கூறும் 5 முக்கிய காரணங்கள்..!

Mon Oct 27 , 2025
What causes women to gain weight quickly? Experts say 5 main reasons!
pcos weight gain overweight woman mobile

You May Like