கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று 1500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் சென்னையை விட்டு விலகி சென்றது. சென்னையில் இருந்து 170 கி.மீ. வடக்கு நோக்கி விலகிச் சென்றது மிக்ஜாம் புயல். ஆந்திராவின் பாபட்லாவிற்கு தெற்கு திசையில் 150 கி.மீ. தொலைவில் தற்போது புயல் மையம் கொண்டுள்ளது.
கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் இன்று 1500 தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். நெய்வேலி என்.எல்.சி.யில் இருந்து அதிக திறன் கொண்ட மோட்டார் பம்புகள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதே போல சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகராட்சிகளில் பகுதி வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மீட்பு, நிவாரணப் பணிகளை கண்காணிக்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.