” என்னை மன்னித்து விடுங்கள்.. ” பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்ட விஜய்.. இதனால் தான் கரூருக்கு போகலயாம்..!

vijay n

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியது.. சம்பவம் நடந்த உடனே விஜய் கரூர் செல்லாததும், செய்தியாளர்களின் கேள்வியை தவிர்த்து விஜய் திருச்சி விமான நிலையத்தில் ஓடியதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. மேலும் 3 நாட்கள் கழித்து வீடியோ போட்ட விஜய், அதில் கரூர் துயரத்திற்கு துளியும் வருத்தமோ மன்னிப்போ கேட்காமல் சினிமா டயலாக் பேசியதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.. விஜய் மட்டுமின்றி ஒட்டுமொத்த தவெக கட்சியும் கிட்டத்தட்ட 16 நாட்கள் தலைமறைவாக இருந்தது..


கரூர் துயர வழக்கை சிபிஐக்கு உச்சநீதிமன்றம் மாற்றிய பின்னர் தான் தவெகவின் 2-ம் கட்ட தலைவர்கள் வெளியே வரத் தொடங்கினர்..

ஆனால் விஜய் ஏன் இன்னும் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. எனவே கரூர் சம்பவம் தொடர்பாக 20 பேர் கொண்ட குழுவை விஜய் நியமித்திருந்தார்.. அதன்படி அவர்கள் கரூரில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்தினரையும் சந்தித்து கூறினர்.. அப்போது தான் விஜய் வீடியோ காலில் வந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்..

இதை தொடர்ந்து விஜய் கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பார் என்ற தகவல் வெளியான வண்ணம் இருந்தது.. ஆனால் விஜய் கரூர் செல்லும் பிளானை கைவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு அழைத்து ஆறுதல் கூறுவார் என்று கூறப்பட்ட்டது.

இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து விஜய் ஆறுதல் கூறினார்.. மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இந்த நிகழ்வு நடந்தது.. அப்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தன்னை மன்னித்து விடுமாறு விஜய் கண்ணீருடன் உருக்கமாக மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.. மேலும் “ உங்களை மாமல்லபுரம் அழைத்து வந்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள். நிச்சயம் உங்களை கரூர் வந்து சந்திப்பேன்..

வாழ்நாள் வரை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இருப்பேன்.. என்ன உதவிகள் தேவை என்றாலும் செய்து தருவேன்..” என்று விஜய் கூறினாராம்.. மேலும் வேலைவாய்ப்பு, திருமணம், கல்வி செலவு என அனைத்தையும் தான் ஏற்றுக் கொள்வதாக விஜய் உறுதி அளித்ததாகவும் கூறப்படுகிறது.. மேலும் மண்டபம் கிடைக்காததால் தான் கரூருக்கு வர முடியவில்லை எனவும் விஜய் விளக்கம் அளித்தாராம்..

Read More : “மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும்.. ஏன்னா…” ஓபிஎஸ் பரபரப்பு கருத்து..

RUPA

Next Post

காரணமின்றி ரயிலில் சங்கிலியை இழுத்தால் என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் தெரியுமா?

Mon Oct 27 , 2025
ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலியைப் பார்க்கும் போதெல்லாம், ஒவ்வொரு பயணிக்கும் எழும் கேள்வி என்னவென்றால், அதை இழுத்தால் என்ன நடக்கும் என்பதுதான். ஆனால் இது வேடிக்கையாக இல்லை. இது ரயில் பயணிகள், பாதுகாப்பு மற்றும் பிற பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தும். எந்த காரணமும் இல்லாமல் ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலியை இழுத்தால், நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். இதுகுறித்து பார்க்கலாம்.. ரயிலில் எச்சரிக்கைச் சங்கிலி 150 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் பொறியாளர் ஜார்ஜ் […]
pulling a chain on a train

You May Like