சென்னையை விட்டு விலகிய மிக்ஜாம் புயல் நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வந்தது. நேற்று(நவ.,04) சென்னை நோக்கி வந்த புயல் சென்னையில் இருந்து விலகி ஆந்திராவை நோக்கி நகர்ந்து வந்தது. தற்போது சென்னையில் இருந்து விலகி வடக்கில் 170கி.மீ தொலைவில் விலகிச்சென்று ஆந்திராவின் நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே இன்று காலையில் கரையை கடக்க துவங்கி உள்ளது. முழுவதுமாக கடக்க இன்று முற்பகல் வரை ஆகும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் ஆந்திராவின் நெல்லூர் மசூலிப்படினம் பகுதிகளில் பெரும் கனமழை பெய்து வருகிறது.