புதிய ஐபோன் வாங்க நினைத்திருப்போருக்கு இது ஒரு ‘சூப்பர் ஆஃபர்’ . ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட iPhone 16 Plus மாடலுக்கு தற்போது ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) நிறுவனம் பெரிய அளவிலான தள்ளுபடி அறிவித்துள்ளது.
இதன் விலை வழக்கமாக ரூ.89,900 ஆகும். ரூ.5000க்கும் அதிகமான தள்ளுபடியில் கிடைக்கிறது. இப்போது அதன் விலை ரூ.67,990. ஆக்சிஸ் வங்கி அட்டையில் ரூ.4,000 கூடுதல் தள்ளுபடி உள்ளது. இதோடு ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் வழங்குகிறது. உங்கள் பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து ரூ.26,000 வரை தள்ளுபடி பெறலாம்.
ஐபோன் 16 பிளஸ் அம்சங்கள்: ஆப்பிள் ஐபோன் 16 பிளஸ் பல அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த iPhone 16 Plus மாடல் 6.7 இன்ச் Super Retina XDR OLED டிஸ்ப்ளே வசதியுடன் வருகிறது. இதன் திரை பிரகாசம் மற்றும் நிறத் தெளிவு முந்தைய மாடல்களை விட சிறப்பாக உள்ளது. செயலி பிரிவில், ஆப்பிளின் புதிய A18 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போனின் செயல்திறன், கிராபிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான பண்புகள் அனைத்தும் வேகமாகவும் துல்லியமாகவும் இயங்குகின்றன.
பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த வெளிச்சத்திலும் உயர் தரமான புகைப்படங்கள் எடுக்க முடியும். முன்புறத்தில் 12 மெகாபிக்சல் TrueDepth செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய iPhone 16 Plus மாடல் Apple Intelligence (AI) அம்சத்துடன் வருகிறது. இதன் மூலம் உரை அடையாளம் காணுதல், புகைப்படங்களை தெளிவாக்குதல் மற்றும் மொழி மாற்றம் போன்ற பல நுண்ணறிவு பணிகளை எளிதாக செய்ய முடியும். போனில் Face ID, MagSafe சார்ஜிங், iOS 18 இயங்குதளம், மற்றும் நீண்ட நேரம் செயல்படும் பேட்டரி போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இது நீண்ட பேட்டரி ஆயுளைக் கொண்டுள்ளது. இது IP68 மதிப்பீட்டில் நீர் மற்றும் தூசியிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இது ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் டிஜிட்டலின் இந்த மெகா சலுகை ஐபோன் வாங்க விரும்புவோருக்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். ரூ. 25,910 வரை தள்ளுபடிகள், EMI, எக்ஸ்சேஞ்ச் போனஸ் ஆகியவை இந்த ஒப்பந்தத்தை இன்னும் கவர்ச்சிகரமானதாக ஆக்குகின்றன.



