Flash : மோன்தா புயல் நாளை சூறாவளியாக மாறும்.. வானிலை மையம் எச்சரிக்கை..

cyclone n

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று காலை மோன்தா புயலாக மாறியது.. இந்த நிலையில் மோன்தா புயல் தீவிரப் புயலாக வலுவடைந்ததாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இன்று காலை 15 கி.மீ வேகத்தில் நகர்ந்த புயல், பின்னர் வேகம் குறைந்து 10 கி.மீ வேகத்தில் நகர்ந்தது.. இந்த நிலையில் தற்போது இந்த புயல் நகரும் வேகம் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.. அதன்படி 15 கி.மீ வேகத்தில் மோன்தா புயல் நகர்ந்து வருகிறது..


இன்று மாலை அல்லது இரவு ஆந்திரா அருகே இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.. ஆந்திராவின் காக்கிநாடா பகுதிக்கு அருகில் மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே இந்த புயல் கரையைக் கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் மிக அதிக கனமழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.. அதன்படி புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மோன்தா புயல் சூறாவளிப் புயலாக மாறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.. இன்று மாலை அல்லது இரவு ஆந்திர கடற்கரையை கடக்கும் இந்த புயல் தெற்கு ஒடிசா, சத்தீஸ்கர் வழியாக நகர்ந்து நாளை அதிகாலை சூறாவளிப் புயலாக மாறும்.. இந்த சூறாவளிப்புயல் நாளை நண்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக படிப்படியாக பலவீனமடையும் என வானிலை மையம் அறிவித்துள்ளது..

இதனிடையே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அரசு தயார்நிலையை முடுக்கிவிட்டுள்ளது. கடலோரப் பகுதிகளில் உயிர்களைப் பாதுகாக்கவும் சேதத்தைக் குறைக்கவும் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் என். சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பெத்தப்பள்ளி, ஜெயசங்கர் பூபல்பள்ளி மற்றும் முலுகு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. தெற்கு ஆந்திராவில் அக்டோபர் 29 புதன்கிழமை வரை 20 செ.மீ.க்கும் அதிகமான கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது..

Read More : அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. 8வது ஊதியக் குழு.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..!

RUPA

Next Post

லிவ்-இன் பார்ட்னருடன் உல்லாசம்..!! ஹார்டு டிஸ்க்கில் அந்தரங்க வீடியோ..!! Ex காதலனுடன் சேர்ந்து நாடகமாடிய இளம்பெண்..!!

Tue Oct 28 , 2025
டெல்லி மாநிலம் திமர்பூரில் உள்ள காந்தி விஹார் பகுதியில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்குப் படித்து வந்த 32 வயது இளைஞர் ஒருவர், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தீயில் கருகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர் ராம் கேஷ் மீனா என்று அடையாளம் காணப்பட்டது. முதலில் இதைத் தீ விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பாகவே காவல்துறையினர் சந்தேகித்தனர். ஆனால், ராம்கேஷ் மீனாவின் பெற்றோர் […]
Crime 2025 13

You May Like