fbpx

ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்யும் அபிஷேக் பச்சன்..!! தீயாய் பரவும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘இருவர்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இந்தியளவில் பல இளைஞர்களின் மனதில் கனவுக் கன்னியாக இருந்து வந்த இவர், 2007இல் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னர் ஐஸ்வர்யா ராய், தனது மனதுக்கு நெருக்கமான கதைகளை அதிகம் தேர்ந்தெடுத்து நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன்-2’ வெளியானது. இந்நிலையில், அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் விவாகரத்து செய்யும் முடிவில் உள்ளதாக மீண்டும் ஒரு தகவல் பாலிவுட் திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. அதனை நிரூபிக்கும் வகையில், அபிஷேக் பச்சனின் புகைப்படம் ஒன்று வெளியாகி சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

அதுமட்டுமின்றி, ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் மகிழ்ச்சியாக இல்லை என உமர் சந்து ட்வீட் செய்துள்ளார். இது தவிர, அபிஷேக் பச்சனின் கையில் அவரது திருமண மோதிரம் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மறுபுறம், அபிஷேக் ஐஸ்வர்யாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடரவில்லை என்றும் வதந்திகளும் உள்ளன. இதுகுறித்து உமர் சந்து கூறுகையில், இருவருக்கும் இடையே பல ஆண்டுகளாக பரஸ்பர புரிந்துணர்வு இருப்பதாகவும், அவர்கள் பிரிந்து செல்ல தயாராகி வருவதாகவும் கூறியுள்ளார். எனினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை.

Chella

Next Post

மீனாவை 2-வது மனைவியாக்க வீட்டில் பெண் கேட்ட நடிகர்..!! யாருன்னு தெரியுமா..?

Wed Dec 6 , 2023
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் ஹீரோயினாக புகழ் பெற்றவர் நடிகை மீனா. ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த இவர், பின்னர் வீரா, முத்து, எஜமான் போன்ற திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்தார். தொடர்ந்து கமல்ஹாசன், அஜித் உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்து சுமார் 40 ஆண்டுகள் ஆனதை அண்மையில் விழாவாக கொண்டாடினர். மீனாவின் கணவர் நுரையீரல் தோற்று […]

You May Like