இன்று வரை மர்மம் விலகாத கோயில்..!! லிங்க கருவறையில் தலைகீழாக தெரியும் நிழல்..!! எங்கு இருக்கு தெரியுமா..?

Temple 2025 1

இந்திய மண்ணில் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு கோவில்கள், இன்றும் நவீன அறிவியலால் புரிந்துகொள்ள முடியாத மர்மங்களை உள்ளடக்கியுள்ளன. அந்தப் பட்டியலில் இடம்பெறும் மிக முக்கியமான கோவில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள சாயா சோமேஸ்வரர் கோவில் ஆகும்.


சுமார் 10-ஆம் நூற்றாண்டில் கண்டூர் சோழர்களால் கட்டப்பட்ட இந்தக் கோவில், நிழல்களை அடிப்படையாகக் கொண்ட அதன் கட்டிடக் கலைக்காகப் புகழ்பெற்றது. இந்தக் கோவில் ‘F’ வடிவிலான அமைப்பில் 3 கருவறைகளைக் கொண்டுள்ளது. இந்த 3 கருவறைகளும் வெவ்வேறுபட்ட, நம்ப முடியாத மர்ம நிழல்களை கொண்டுள்ளன.

பிரம்மாவின் கருவறை : இந்தக் கருவறைக்கு எதிரில் ஒருவர் நின்றால், ஆச்சரியப்படும் விதமாக அவர் தன் உருவத்தின் நான்கு நிழல்களை ஒரே நேரத்தில் காண முடியும். ஒரு மனித உருவத்திற்கு ஏன் நான்கு நிழல்கள் உருவாகின்றன என்பது இன்று வரையிலும் அறிவியல் ஆய்வாளர்களால் விடுவிக்க முடியாத புதிராகவே உள்ளது.

லிங்க கருவறை (நிழல் தலைகீழ்) : இந்தக் கருவறைக்கு எதிரில் ஒருவர் நிற்கும்போது, அவரது நிழல் வழக்கமான திசையில் விழாமல், அவருக்கு எப்பொழுதும் எதிர் திசையிலேயே விழுகிறது. நிழல்களின் இயக்க நியதிக்கு எதிராக இந்த நிழல் செயல்படுவது, கட்டிடக் கலைஞர்களின் பிரமிக்க வைக்கும் அறிவைப் பறைசாற்றுகிறது.

பிரதான லிங்க கருவறை (நகராத நிழல்) : இந்தக் கோவிலின் கட்டிடக் கலையின் உச்சமாக இருப்பது பிரதான லிங்க கருவறைதான். இங்குள்ள லிங்கத்தின் பின்புறத்தில் ஒரு தூணின் நிழல் விழுந்து கொண்டிருக்கிறது. இந்த நிழலின் சிறப்பு என்னவென்றால், சூரியன் உதிப்பது முதல் அந்தி மறையும் வரை அந்த நிழல் ஒரு இன்ச் கூட நகர்வது கிடையாது. மேலும், இரவு நேரங்களில் கூட அந்த நிழல் மறைவதில்லை.

உலகின் பொது விதிகளின்படி, சூரியன் நகர நகர நிழலின் கோணமும் நீளமும் மாறிக்கொண்டே போகும். ஆனால் இங்கு, நாள் முழுவதும் நிழல் ஒரே இடத்தில் நிலைத்திருப்பது, பண்டைய கட்டிடக் கலைஞர்கள் ஒளியியல் அறிவை எந்த அளவிற்கு துல்லியமாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

இந்தக் கருவறைக்கு முன்புறம் 4 பெரிய தூண்கள் உள்ளன. ஆனால், கருவறையில் விழும் அந்த நகராத நிழல், இந்த தூண்களில் எந்தத் தூணால் உருவானது என்று இன்று வரை யாராலும் சரியாக கண்டறிய முடியவில்லை. நாம் எந்தத் தூணிற்கு அருகே நின்று பார்த்தாலும், கருவறையில் அந்தத் தூணின் நிழல் மட்டுமே விழுகிறதே தவிர, நம்முடைய நிழல் கீழே விழுவதில்லை.

‘சாயா’ என்ற சமஸ்கிருத சொல்லுக்கு ‘நிழல்’ என்று பொருள். நிழல்களை அடிப்படையாகக் கொண்ட இந்த மர்மங்களின் காரணமாகவே இக்கோவிலுக்குச் ‘சாயா சோமேஸ்வரர் கோவில்’ என்ற பெயர் வந்தது. இங்குள்ள கடவுளை மக்கள் ‘நிழல்களின் தெய்வம்’ என்று பக்தியுடன் போற்றுகின்றனர்.

Read More : Holiday: ராஜராஜ சோழனின் 1,040வது சதய விழா… நவ. 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை…!

CHELLA

Next Post

1,429 ஹெல்த் இன்ஸ்பெக்டர் காலியிடங்கள்..!! 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! மாதம் ரூ.71,900 வரை சம்பளம்..!!

Wed Oct 29 , 2025
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், மாநில சுகாதாரத் துறையில் காலியாக உள்ள 1429 சுகாதார ஆய்வாளர் கிரேடு-II (Health Inspector Grade-II) பணியிடங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB) பணியின் பெயர்: சுகாதார ஆய்வாளர் கிரேடு-II மொத்த காலியிடங்கள்: 1,429 பணியிடம்: தமிழ்நாடு முழுவதும் சம்பளம்: இந்தப் […]
Health Inspector 2025

You May Like