சினிமாவை விட்டு விலகும் ரஜினி? இதுதான் அவரின் கடைசி படமாம்.. ஷாக்கில் ரசிகர்கள்.!

rajinikanth

தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.. தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் நடிப்பின் மூலம் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கிறார்.. தனது 74 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிசியாக நடிகராக ரஜினி வலம் வருகிறார்.. இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் ரஜினி இருக்கிறார்..


எத்தனை வயதானாலும் ரஜினிக்கு இருக்கும் அந்த ஈர்ப்பு வேறு எந்த நடிகருக்கும் இல்லை என்பதே உண்மை.. அதனால் தான் ரஜினி படம் எப்போது திரைக்கு வந்தாலும் அவரின் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுகின்றனர்.. ரஜினி படம் என்றாலே 100 கோடி வசூல் கன்ஃபார்ம் என்பதால் அவர் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் அழைக்கப்படுகிறார்..

அந்த வகையில் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் கூலி படம் வெளியானது.. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியில் வெற்றிப் படமாகவே அமைந்தது.. இந்த படம் சுமார் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார்.. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது..

இதை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.. இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனும் ரஜினி உடன் இணைந்து நடிக்க உள்ளாராம்.. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வயதாகிவிட்டதால் நடிப்பை விட்டு விலகி அவர் ஓய்வெடுக்க விரும்புவதாகவும் கூறப்படுகிறது..

இந்த படத்தை முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்டது.. பின்னர் இந்த படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது.. இந்த நிலையில் சுந்தர் சி இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.. இதன் ஊலம் அருணாச்சலம் படத்திற்குப் பிறகு 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி – சுந்தர் சி ஜோடி மீண்டும் இணைகிறது.

இந்த படத்தை தொடர்ந்து ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்க உள்ளாராம்.. இந்த படத்தை நெல்சன் இயக்குவார் என்று கூறப்படுகிறது, படப்பிடிப்பு 2027 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் தான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..

RUPA

Next Post

தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.. விவரம் இதோ..

Wed Oct 29 , 2025
முதல்வர் ஸ்டாலின் இன்று தென்காசியில் அரசு சார்பில் நடை.. மேலும் 445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மேலும் ரூ.575 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் மொத்தம் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்டம் அனந்தபுரம் அரசு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விழாவில் சிறப்புரையாற்றினார்.. அப்போது ” தென்காசி மாவட்டத்தில் மட்டும் 4 […]
tamilnadu cm mk stalin

You May Like