Breaking : ஒரே நாளில் ரூ.2,000 உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.90,000ஐ தாண்டியதால் பேரதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

jewels new

2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. குறிப்பாக தங்கம் விலை ரூ.86,000-ல் இருந்து தற்போது ரூ.97,000ஐ தொட்டுள்ளது.. அதே போல் கடந்த வாரமும் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த வாரத்தில் சுமார் ரூ.4000 வரை விலை குறைந்தது.. அதே போல் நேற்று ஒரே நாளில் ரூ.3,000 விலை குறைந்தது..

சென்னையில் இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது.. இன்று காலை தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ. 135 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ.115 உயர்ந்து ரூ.11,325க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்த நிலையில், மாலையில் ரூ.920 உயர்ந்து ரூ.90,600க்கு விற்பனையாகிறது.. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.2000 உயர்ந்துள்ளதால் பொதுமக்களும் நகைப்பிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று காலை வெள்ளி விலையும் உயர்ந்தது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து, ரூ.166க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து ரூ1,66,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : ரூ. 17 லட்சம் தரும் போஸ்ட் ஆபீஸின் அசத்தலான திட்டம்.. வட்டி மட்டுமே இவ்வளவா..?

RUPA

Next Post

Flash : “வருங்காலம்‌ நமதென்று காட்ட தீர்க்கமாகத்‌ திட்டமிடுவோம்‌..” தவெக பொதுக்குழுவுக்கு தேதி குறித்த விஜய்.. அதிரடி அறிவிப்பு..

Wed Oct 29 , 2025
தவெக பொதுக்குழு கூட்டம் வரும் 5-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ என்‌ நெஞ்சில்‌ குடியிருக்கும்‌ தோழர்களுக்கு, வணக்கம்‌. நம்‌ அரசியல்‌ பயணத்தில்‌ அர்த்தம்‌ பொதிந்த ஓர்‌ ஆழ்நீள்‌ அடரமைதிக்குப்‌ பிறகு, உங்களோடு பேசவும்‌ உங்களை அழைக்கவுமான ஒரு கடிதம்‌ இது. சூழ்ச்சியாளர்கள்‌, சூதுமதியாளர்கள்‌ ‘துச்சமாக எண்ணி நம்மைத்‌ தூறு செய்த போதினும்‌, அச்சமின்றி அத்தனையையும்‌ உடைத்தெறிந்துவிட்டு நம்‌ […]
20250214090756 Vijay

You May Like