“அற்புதமான சந்திப்பு..” சீனா மீதான வரியை 10% குறைப்பு.. ஜின்பிங்கை சந்தித்த பின் முடிவை மாற்றிய ட்ரம்ப்!

trump china tariffs

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென் கொரியாவின் புசான் நகரில் சீன அதிபர் ஜி ஷின்பிங்கை சந்தித்து பேசினார்.. இருவரும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பை அற்புதமான சந்திப்பு என்று கூறிய ட்ரம்ப், சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி 57% இலிருந்து 47% ஆகக் குறைக்கப்படும் என்று கூறினார்..


இரு நாடுகளுக்கிடையேயான முக்கிய ஒப்பந்தங்கள்

ட்ரம்ப் இதுகுறித்து பேசிய போது “ இன்று பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. சில முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.” என்று தெரிவித்தார்.. மேலும் “எல்லாவற்றையும் விவாதிக்கவில்லை. ஆனால் இது ஒரு அற்புதமான சந்திப்பு.. சீனாவிலிருந்து சோயாபீன் இறக்குமதி உடனடியாக தொடங்கும்.
சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரிகள் 57 சதவீதத்திலிருந்து 47 சதவீதம் ஆகக் குறைக்கப்படும்.” என்று தெரிவித்தார்..

‘ரேர் எர்த்’ ஒப்பந்தம்

முக்கியமான ஒப்பந்தங்களில் ஒன்றாக இருந்தது ‘ரேர் எர்த்’ (Rare Earths) குறித்த ஒப்பந்தம். இவை அதிநவீன தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள், பாதுகாப்புத் துறை உபகரணங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் முக்கிய கனிமங்கள்.

ட்ரம்ப் இதுகுறித்து பேசிய போது “ “ரேர் எர்த் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுள்ளன. இனி எந்தத் தடையும் இருக்காது.” என்று தெரிவித்தார்..

சீனா, ஒரு ஆண்டுக்கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரேர் எர்த் கனிமங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் என்றும் இரு நாடுகளும் இதை அடுத்த ஆண்டும் புதுப்பிக்க ஒப்புக்கொண்டுள்ளன என்றும் அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்..

இந்த ஒப்பந்தம், கடந்த மாதங்களில் அமெரிக்க தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புத் துறைகளில் எழுந்த விநியோக சங்கிலி (supply chain) கவலைகளை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 ஆண்டுகளுக்குப் பிறகு, ட்ரம்ப் மற்றும் ஜி ஜின்பிங் புசானில் நேருக்கு நேர் சந்தித்தனர். ட்ரம்ப் ஜி ஜின்பிங்கை “ஒரு கடினமான ஆனால் திறமையான பேச்சுவார்த்தையாளர்” எனக் குறிப்பிட்டார்.. மேலும் சந்திப்பு மூலம் நம்பிக்கையூட்டும், அற்புதமான ஒப்பந்தம் உருவாகும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்..

சீன அதிபர் ஜி ஜின்பிங் இதுகுறித்து பேசிய போது “உலகின் மிகப் பெரிய இரண்டு பொருளாதாரங்களுக்கிடையில் சில மோதல்கள் (frictions) இயல்பானவை.
ஆனால் சீனாவும் அமெரிக்காவும் ஒருவருக்கொருவர் ஆதரவாகவும், நிலையான அடித்தளத்தில் வளர்ச்சியை மேற்கொள்வதும் முக்கியம்.” என்று கூறினார்..

Read More : அடுத்த ஷாக்..! 14,000 பேரை பணி நீக்கம் செய்யும் அமேசான்.. கலக்கத்தில் ஊழியர்கள்..

RUPA

Next Post

இந்த நோய்கள் இருந்தால், சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடாதீர்கள்..!! ஏன் தெரியுமா..?

Thu Oct 30 , 2025
If you have these diseases, don't eat sugar beet..!! Do you know why..?
sweet potato 1

You May Like