தமிழ்நாடு அரசின் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் மற்றும் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் உள்ள குழந்தைகள் உதவி மையங்களில் (Childline 1098) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
பணியிட விவரம்:
- மேற்பார்வையாளர் – 6
- வழக்கு பணியாளர் – 6
வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நபர்கள் 42 வயதைக் கடந்தவராக இருக்கக்கூடாது . அவசார உதவி மையத்தில் ஏற்கனவே பணிபுரிந்தவராக இருந்தால் 52 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
* மேற்பார்வையாளர் பதவிக்கு சமூகப் பணி, கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், வகுப்பு சமூகவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
* கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.
* வழக்கு பணியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு வாரியத்தின் கீழ் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் நல்ல கம்யூனிகேஷன் திறன் அவசியம்.
* அவரச உதவி எண்களில் பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: குழந்தைகள் உதவி மையத்தின் மேற்பார்வையாளருக்கு மாதம் ரூ.21,000 மற்றும் வழக்கு பணியாளர் பதவிக்கு மாதம் ரூ.18,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை: இப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தில் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள், https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். அதை முழுமையாக நிரப்பி, தேவையான கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவச் சான்றிதழ் நகல்களை இணைத்து, தபால் மூலம் அல்லது நேரடியாக கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
3வது தளம், கூட்டுதல் கட்டிடம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
மதுரை – 625 020.
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 12.



