தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக முக்கியப் பிரமுகர்களின் வீடுகளைக் குறிவைத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் இந்தப் போலி மிரட்டல்களால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் தலைமை செயலகம், உயர்நீதிமன்றம், வானிலை மைய அலுவலகம், அதிமுக தலைமை அலுவலகம் முக்கிய இடங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.. எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், ஐஏஎஸ் அதிகாரிகள், இசைஞானி இளையராஜா என முக்கிய பிரமுகர்களின் வீடுகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் இயங்கும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. கே. என். நேரு மீது வழக்கு தொடர்ந்தால் திராவிடர்களான நாங்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வெடி வைப்போம் என இமெயிலில் தெரிவிக்கப்பட்டது. டிஜிபி அலுவலகத்தின் மின்னஞ்சல்லுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.. இதையடுத்து போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.. இதையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது..
Read More : பிகாரிகள் பற்றி திமுகவினர் பேசுனதெல்லாம் மறந்துடுச்சா? எதுக்கு இரட்டை வேடம் முதல்வரே? நயினார் காட்டம்!



