திருமணம் முடிந்த ஆரம்ப காலங்களில் கணவன் – மனைவி இருவரும் நெருக்கமாக உறங்குவது இயல்பு. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, வேலையின் சுமை, மன அழுத்தம், அல்லது சில அற்ப காரணங்களுக்காக தம்பதிகள் படுக்கை அறையில் இடைவெளி விட்டு, அல்லது தனித்தனி படுக்கைகளில் தூங்கும் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். இந்தச் சிறிய இடைவெளி நாளடைவில் கணவன்-மனைவி உறவில் என்னென்ன கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் பட்டியலிடுகின்றனர்.
உணர்ச்சிப்பூர்வமான நெருக்கம் குறைதல் :
தம்பதிகளுக்கு கிடைக்கும் மிக முக்கியமான ரிலாக்ஸ் நேரம், படுக்கை அறையில் செலவழிக்கும் நேரம் மட்டுமே. இங்குதான் அவர்கள் மனம் விட்டுப் பேசவும், காதலிக்கவும், உடல் ரீதியான நெருக்கத்தை உணர்வதற்கும் வாய்ப்பு அதிகம். கணவன் – மனைவி இருவரும் அருகருகே இல்லாமல், தனித்தனித் துருவங்கள் போல உறங்கும்போது, அவர்களுக்கு இடையேயான உணர்ச்சிப்பூர்வமான நெருக்கம் மற்றும் அன்பின் தீண்டல் குறைந்து போகிறது. இதனால், தங்கள் துணையின் மீதான ஈர்ப்பு குறைந்து, உறவு எளிதில் சலிப்பை அடைந்துவிடும் அபாயம் உள்ளது. நாளடைவில், துணையின் ஸ்பரிசம் கூடப் பெரிதாக உணர்ச்சிகளை தூண்டாமல் போகலாம்.
உடலுறவில் நாட்டமின்மை :
தனித்தனியாகப் படுத்து உறங்குவது வழக்கமாகும்போது, நாளடைவில் இருவருக்கும் இடையே உடலுறவில் நாட்டமின்மை ஏற்பட தொடங்கலாம். படுக்கை அறையில் நெருக்கமின்றி இருப்பது, துணையை அந்நியராகப் பார்க்க வைக்கும் அனுபவத்தைக் கொடுக்கலாம். இது புரிதலின்மைக்கு வழிவகுத்து, மன உளைச்சலை அதிகரிக்கும். மேலும், உடல் ரீதியான நெருக்கமும் அன்பின் வெளிப்பாடும் உறவில் இல்லாதபோது, தம்பதிகளுக்குள் அடிக்கடிச் சண்டைகள் ஏற்படத் தொடங்கும்.
நீண்ட நாட்களுக்கு இந்த இடைவெளி தொடர்ந்தால், துணையின் மீதான கவனம் திசை திரும்பி, மற்றவர் மீது காதல் வயப்படவோ அல்லது துணையை வெறுக்கவோ ஆரம்பிக்கும் அபாயம் அதிகம் உள்ளது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Read More : மக்களே..!! 2026 பொங்கல் பரிசு என்ன தெரியுமா..? முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் ஆர்.காந்தி..!!



