அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ எம்ஜிஆரின் பாராட்டுகளை பெற்றவன் நான்.. ஜெயலலிதா காட்டிய திசையில் கட்சிக்காக இரவு பகலாக உழைத்தேன்.. விசுவாசமாக இருந்ததால் தான் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பல்வேறு பொறுப்புகளை தந்தனர்.
அதிமுக உடைந்துவிட கூடாது என்பதற்காக இரண்டு முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை.. இபிஎஸ் பொதுச்செயலாளராக இருந்த போது அவர் எடுத்த முடிவுகளால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. பொதுச்செயலாளராக தேர்தல் களத்தில் வெற்றியை காணாதவர் இபிஎஸ்..
ஒரு முறை தோற்றால் கூட மறு முறை வரலாற்று வெற்றி பெறுவார் ஜெயலலிதா.. கட்சி ஒருங்கிணைய வேண்டும என நாங்கள் 6 பேர் இணைந்து இபிஎஸ்ஸிடம் பேசினோம்.. வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் கட்சி ஒருங்கிணைய வேண்டும் என இபிஎஸ்ஸிடம் பேசினேன்..
கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் நாங்கள் அந்த கருத்துகளை தெரிவித்தோம். கட்சி வலிமையாக இருக்க வேண்டும். ஆட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நான் எனது கருத்துகளை தெரிவித்தேன்.. அதிமுக தொண்டர்களின் மனதை புரிந்துகொண்டு கட்சி இணைய வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்..
எல்லோரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் தேவர் ஜெயந்தி தினத்தில் அனைவருடனும் பேசினேன்.. தேவர் ஜெயந்திக்கு சென்ற போதும் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று பேசினேன். அதற்கு கிடைத்த பரிசு தான் அதிமுகவில் இருந்து நீக்கம்.. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களோடு நான் பேசியது உண்மை தான்..” என்று தெரிவித்தார்..
Read More : “பூஜ்ஜியங்கள் ராஜ்யங்கள் அமைக்க முடியாது..” ஓபிஎஸ் – செங்கோட்டயனை சாடிய ஆர்.பி. உதயகுமார்..



