இந்திய ரயில்வே 2569 ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்கள்.. ஆரம்பமே 34,000 சம்பளம்..!! செம வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..

railway 2025

இந்திய ரயில்வேயில் மொத்தம் 2,569 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


நிரப்பப்படும் பணியிடங்கள்: இந்த பணியிடங்கள் ஜூனியர் இன்ஜினியர் (Junior Engineer), டிப்போ மெட்டீரியல் சூப்பர்வைசர் (Depot Material Superintendent) மற்றும் வேதியியல் & உலோகவியல் உதவியாளர் (Chemical and Metallurgical Assistant) ஆகிய பிரிவுகளில் நிரப்பப்பட உள்ளன.

சம்பளம்: 7வது ஊதிய குழுவின் அடிப்படையில் நிலை 6 கீழ் ரூ.35,400 தொடக்க சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 18 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி தளர்வுகள் உண்டு.

கல்வித்தகுதி:

* ஜூனியர் இன்ஜினியர் பதவிக்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், சிவில், உற்பத்தி, தொழிற்சாலை மிஷின், இன்ஸ்ரூமெண்டேஷன், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் பாடப்பிரிவுகள் மற்றும் அதற்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் 3 ஆண்டு டிப்ளமோ என்பது கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பொறியியல் பாடப்பிரிவுகளில் பட்டப்படிப்பு B.E/B. Tech முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

* டிப்போ பொருள் கண்காணிப்பாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பொறியியல் பாடப்பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

* வேதியியல் மற்றும் உலோகவியல் உதவியாளர் பதவிக்கு இயற்பியல் அல்லது வேதியியல் ஆகியவற்றில் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பை 45 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்திய ரயில்வேயின் 2,569 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு இரண்டு கட்டங்களாக கணினி வழியில் (CBT – Computer Based Test) நடத்தப்படுகிறது.

முதல் கட்ட தேர்வு: மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் கணிதம், பொது விழிப்புணர்வு, பொது அறிவு, பொது அறிவியல், போன்ற பாடப்பிரிவுகள் இடம்பெறும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இரண்டாம் கட்டத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

இரண்டாம் கட்ட தேர்வு: இது 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் பொது விழிப்புணர்வு, இயற்பியல் மற்றும் வேதியியல், கணினி பயன்பாடு, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப திறன் போன்ற பிரிவுகள் அடங்கும். இரண்டாம் கட்டத்திலும் தேர்ச்சி பெறுவோருக்கு பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு (Document Verification) மற்றும் மருத்துவ பரிசோதனை (Medical Examination) நடத்தப்பட்டு, அதன் பின் பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது? தமிழ்நாட்டைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சென்னை ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbchennai.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 30.11.2025.

Read more: வாகன ஓட்டிகளுக்கு செக் வைத்த மத்திய அரசு..!! இனி தப்பிக்கவே முடியாது..!! சுங்கச்சாவடிகளில் அறிமுகமான புதிய திட்டம்..!!

English Summary

A total of 2,569 vacancies have been announced in Indian Railways.

Next Post

கொலஸ்ட்ராலே வராது.. உடல் எடை டக்குனு குறையும்..!! காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிங்க..!!

Sun Nov 2 , 2025
இந்திய உணவு முறையிலும், பாரம்பரிய மருத்துவத்திலும் வெந்தயம் வெறும் சமையல் பொருள் மட்டுமல்ல. வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று முக்கிய தோஷங்களையும் சமநிலைப்படுத்தும் அபூர்வ மூலிகையாகப் பார்க்கப்படுகிறது. இந்த வெந்தய விதைகளை முறையாக உட்கொள்வதன் மூலம் நாம் பெறும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம். வெந்தய நீரின் செரிமான நன்மைகள் : இரவு முழுவதும் வெந்தய விதைகளைத் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வெறும் […]
Weight Loss Water 2025

You May Like