தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மிர்சாகுடா அருகே நடந்த ஒரு விபத்து மாநிலத்தையே உலுக்கியுள்ளது. தண்டூர் பணிமனையைச் சேர்ந்த ஆர்.டி.சி. பேருந்து ஒன்று, ஜல்லிக் கல் பாரம் ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் லாரியில் இருந்த ஜல்லிக் கல் முழுவதுமாகப் பேருந்தின் மீது கவிழ்ந்து விழுந்தது. இதனால், பேருந்தில் பயணம் செய்த பல பயணிகள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். முதற்கட்டத் தகவல்களின்படி, இந்த விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பல பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர். பேருந்தின் மீது விழுந்த பாரம் மற்றும் இடிபாடுகளை அகற்றி, உள்ளே சிக்கியவர்களை வெளியே கொண்டு வர 3 ஜே.சி.பி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Read More : கூடவே பழகிட்டு என் பொண்டாட்டி கூட எப்படி..? ஃபுல் போதையில் இளைஞரை வெட்டி சாய்த்த கள்ளக்காதலியின் கணவன்..!!



