fbpx

மிக்ஜாம் புயல்..!! ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.2,500 நிவாரணம்..!! முதல்வர் அறிவிப்பு..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோரப் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை கொட்டித்தீர்த்தது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, திருப்பதி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து முதல்வர் ஜெகன்மோகன் கூறுகையில், “மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம், குடிநீர் சாலை வசதி உள்ளிட்டவை உடனடியாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

மேலும், சீரான நிலை அடையும் வரை அரசு அனைத்து வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் என்றும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2,500 நிவாரணத் தொகை உடனடியாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

Chella

Next Post

அடுத்தடுத்து மரணமடைந்த 10 குழந்தைகள்.! 24 மணி நேரத்திற்குள் நடந்தேறிய துயரம்.! விசாரணைக் குழு அமைக்க முதல்வர் உறுதி.!

Sat Dec 9 , 2023
மேற்குவங்க மாநிலத்தில் ஒரே நாளில் 10 குழந்தைகள் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என மாநில சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. மேற்குவங்க மாநில முர்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைகள் நேற்று ஒரே நாளில் மரணம் அடைந்தன. மேற்குவங்க மாநிலம் ஜாங்கிப்பூர் துணை பிரிவு மருத்துவமனையிலிருந்து முர்ஷிதாபாத் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டிருந்தனர் என்பது […]

You May Like