தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் (TNRD) காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: கிராம ஊராட்சி செயலாளர்
மொத்த காலியிடங்கள்: 1,483
கல்வித் தகுதி: இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
சம்பளம்: இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு மாதந்தோறும் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
* பொதுப் பிரிவினர்: 18 முதல் 32 வயது வரை.
* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர்: 18 முதல் 34 வயது வரை.
* ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் ஆதரவற்ற விதவைகள்: 18 முதல் 37 வயது வரை.
* மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பில் 10 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50. இதர பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை 10.10.2025 அன்று தொடங்கிவிட்டது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 09.11.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnrd.tn.gov.in மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.



