சென்னையில் பரபரப்பு..!! 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு..!! யார் யார் வீடுகளில் தெரியுமா..?

ED 2025

சென்னையில் இன்று காலை முதலே 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு புகார்கள் தொடர்பாகவே இந்தச் சோதனைகள் நடத்தப்படுவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பாக அமைந்தகரை, சூளைமேடு, நெற்குன்றம், மேதா நகர் உள்ளிட்ட 5 இடங்களில் இந்தச் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வரும் சிலரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வை மேற்கொண்டுள்ளனர்.

கோயம்பேட்டில் வசித்து வரும் சவுதி என்பவரின் இல்லத்திலும், நெற்குன்றம் பகுதியில் சிகை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் லோகேஷ் என்பவரின் வீட்டிலும், அத்துடன் சூளைமேடு மேதா நகரில் உள்ள மற்றொரு வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாகப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

மேலும், பெரும் தொகையிலான வரி ஏய்ப்பு புகாரும் இந்த சோதனைகளுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. சோதனையில் சிக்கிய முக்கிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில், அமலாக்கத் துறை அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தொடர வாய்ப்புள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Read More : அக்காள் கணவரை நினைத்து ஏங்கிப் போன தங்கை..!! கொழுந்தியாளுடன் ஓட்டம் பிடித்த மாமா..!! கோவையில் ஷாக்

CHELLA

Next Post

பெண்களே சமைக்கும்போது உஷார்..!! கோழிக்கறியால் சிறுநீர் பாதையில் நோய் தொற்று வரும் அபாயம்..!! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

Tue Nov 4 , 2025
சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (Urinary Tract Infection – UTI) என்பது பெண்களிடையே பரவலாக காணப்படும் ஒரு சுகாதாரப் பிரச்சனையாகும். ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு சிறுநீர் குழாய் சிறியதாக இருப்பதால், பாக்டீரியா தொற்றுகள் மிக விரைவாகச் சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகத்தை அடைந்து தீவிர பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பொதுவாக நீர்ச்சத்து குறைபாடு அல்லது தனிநபர் சுகாதாரக் குறைபாடு ஆகியவை UTI-க்குக் காரணங்களாகக் கூறப்படும் நிலையில், சமீபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. […]
UTI 2025

You May Like