Breaking : 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்.. ரிசல்ட் எப்போது?

anbil mahesh

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது 10 மற்றும் 12-ம் வகுப்புகான பொதுத்தேர்வு அட்டவணையை அவர் வெளியிட்டார்.. மேலும் பேசிய அவர் “ மார்ச் 2-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வுகள் மார்ச் 26 வரை நடைபெறும்.. தமிழ்நாட்டில் மார்ச் 11-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 6 வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும். தேர்தல் ஆணையத்திடம் பேசிய பிறகே தேர்வு தேதிகள் முடிவு செய்யப்பட்டன. ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே 4 முதல் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது..


மே 8-ம் தேதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.. அதே போல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்படும்..” என்று தெரிவித்தார்.. மேலும் 12-ம் வகுப்பில் கணக்குபதிவியல் தேர்வுக்கு முதல்முறையாக கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்..

RUPA

Next Post

Breaking : அதிமுக MLA மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்! MLA பதவியை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு.. ஷாக்கில் இபிஎஸ்..!

Tue Nov 4 , 2025
ஓபிஎஸ் ஆதரவாளரும், ஆலங்குளம் தொகுதிஅதிமுக எம்.எல்.ஏவுமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்.. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.. முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மகன் தான் இந்த மனோஜ் பாண்டியன். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.. திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திராவிட கொள்கைகளை முழுமையாக பாதுகாக்கும் தலைவராக மு.க ஸ்டாலின் உள்ளார் என்று தெரிவித்தார். எஞ்சி வாழ்க்கையை […]
manojpandiyan

You May Like