பெங்களூருவைச் சேர்ந்த ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் மகேந்திர ரெட்டி தனது மனைவி டாக்டர் கிருத்திகா ரெட்டியை அதிகளவு மயக்க மருந்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.. கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை தொடர்பான புதிய தகவல் வெளியாகி உள்ளது.. தனது மனைவியை கொலை செய்த சில நிமிடங்களுக்குப் பிறகு தனது காதலிக்கு ஒரு செய்தி அனுப்பியிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்தச் செய்தியில் “நான் உனக்காக என் மனைவியை கொன்றுவிட்டேன்.” என்று அவர் கூறியிருந்தார்..
பொது அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகேந்திர ரெட்டி, ஒரு டிஜிட்டல் பேமென்ட் ஆப் மூலம் இந்த செய்தியை அனுப்பியிருந்தார். அவரது மொபைல் போனைப் நிபுணர்கள் பரிசோதித்தபோது, இந்த செய்தி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பெண்ணை போலீசார் விசாரித்து, அவளிடமிருந்தும் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். ஆனால், அந்த காதலியின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.
கொலை பின்னணி
டாக்டர் மகேந்திர ரெட்டி, தனது மனைவி டாக்டர் க்ருத்திகாவை அனஸ்தீஷியா மருந்து அதிக அளவில் கொடுத்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏப்ரல் 21 அன்று அவர்களின் வீட்டில் நடந்தது. அன்று க்ருத்திகா திடீரென உடல்நலம் குன்றியதாகக் கூறி, மகேந்திரவே அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால், அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
விசாரணை மற்றும் ஆதாரங்கள்
பின்னர், நுண்ணறிவு ஆய்வக (FSL) அறிக்கை, கிருத்திகாவின் உடலில் “Propofol” என்ற சக்திவாய்ந்த அனஸ்தீஷியா மருந்து இருப்பதை உறுதிப்படுத்தியது. இது குற்றச்செயல் நடந்திருக்கலாம் என்பதை வெளிப்படுத்தியது. அவர்களின் வீட்டில் விசாரணை நடத்தும் போது, போலீசார் கேனுலா செட், இன்ஜெக்ஷன் குழாய் மற்றும் பிற மருத்துவ சாதனங்கள் போன்ற முக்கிய ஆதாரங்களை கைப்பற்றினர்.
அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, க்ருத்திகாவின் தந்தை, மகேந்திர ரெட்டிக்கு எதிராக காவல்நிலையத்தில் புகாரளித்தார்..
மகேந்திர ரெட்டி, அக்டோபர் 15 அன்று கைது செய்யப்பட்டார். மகேந்திரா தனது மருத்துவ அறிவைத் தவறாகப் பயன்படுத்தி, மனைவியின் மரணத்தை இயல்பானதாக காட்ட முயன்றுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்..
பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் பேசிய போது “இப்போதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், கணவரின் பங்கையே காட்டுகின்றன. அவர் தான் முதலில் மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார், ஆனால் எந்த தவறான விஷயத்தையும் குறிப்பிடவில்லை. அவர் ‘மனைவியின் உடல்நிலை சரியில்லை’ என்று மட்டும் கூறினார். ஆனால், தற்போது அவளுக்கு துாக்க மருந்து (sedative) செலுத்தப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது ஒரு தீங்கிழைக்கும் நோக்கம் இருந்தது என்பதை காட்டுகிறது,” என அவர் தெரிவித்தார்.
தம்பதியின் பின்னணி
டாக்டர் மகேந்திர ரெட்டி மற்றும் டாக்டர் க்ருத்திகா ரெட்டி இருவரும் கடந்த ஆண்டு மே 26 அன்று திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் இருவரும் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Read More : வாட்ஸ் அப் பயனர்களே ஜாக்கிரதை! போலி RTO சலான் மோசடி! இது உங்கள் நம்பரை பிளாக் செய்யலாம்!



