“ஹேய் பாப்பா இங்க வா”..!! 4 வயது சிறுமியை தனியாக கூட்டிச் சென்று 65 வயது முதியவர் செய்த அசிங்கம்..!! சேலத்தில் அதிர்ச்சி..!!

Rape 2025 2

சேலம் மாவட்டம் கருப்பூர் அருகே தேக்கம்பட்டி பகுதியில், 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியைச் சேர்ந்த பெரியசாமி (65) என்பவர், தனது மகள் கீதா மற்றும் மருமகன் பெருமாள் வசிக்கும் அருந்ததி காலனிக்கு சில நாட்களுக்கு முன் வந்துள்ளார். மகளைப் பார்க்க வந்த பெரியசாமி, கீதாவின் வீட்டிலேயே தங்கியிருந்த நிலையில், தெருவில் சக நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை பார்த்துள்ளார்.

உடனே கடைக்குச் சென்று சாக்லேட் வாங்கிக்கொண்டு வந்த பெரியசாமி, சாக்லேட் தருவதாக ஆசை வார்த்தை கூறி அந்தச் சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் சிறுமி அழுதுகொண்டே வந்ததையும், அதைத் தொடர்ந்து முதியவர் அந்தப் பகுதியில் இருந்து வேகமாகச் சென்றதையும் கவனித்த அப்பகுதி மக்கள், உடனடியாக சிறுமியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். இதனால், ஆத்திரமடைந்த மக்கள் சிறுமியையும், பெரியசாமியையும் காவல் நிலையத்திற்குக் கூட்டிச் சென்றனர்.

அங்கு சிறுமியிடம் விசாரித்தபோது, தாத்தா சாக்லேட் தருவதாக கூறி தவறாக நடந்துகொண்டதை தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள், காவல் நிலைய வளாகத்திலேயே முதியவரை சரமாரியாக தாக்கினர். பின்னர், நிலைமையை சமாதானப்படுத்திய போலீசார், முதியவர் பெரியசாமியை உடனடியாக கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

Read More : ஹெல்த் இன்சூரன்ஸ் எடுக்கும்போது இந்த விஷயத்தை எப்போதும் மறந்துறாதீங்க..!! இல்லையெனில் பாலிசி எடுத்தும் பயனில்லை..!!

CHELLA

Next Post

குரு - சந்திரனின் சஞ்சாரம் : இந்த 5 ராசிக்காரர்களுக்கு பெரும் ஜாக்பாட் ! எதிர்பாராத பலன்கள் கிடைக்கும்!

Tue Nov 4 , 2025
வேத ஜோதிடத்தில், கிரகங்களின் நிலை மற்றும் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. நவம்பர் 25 ஆம் தேதி, குரு மற்றும் சந்திரன் 7 ஆம் வீட்டில், அதாவது எதிர் திசைகளில் சஞ்சரித்து, ஒரு அரிய மற்றும் மிகவும் மங்களகரமான யோகத்தை உருவாக்குவார்கள். இந்த பெயர்ச்சி நிதி, திருமணம் மற்றும் தொழில் துறைகளில் அந்தந்த ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய நன்மைகளைத் தரும். அதிர்ஷ்டத்தை பெறப்போகும் இந்த 5 ராசிக்காரர்கள் யார் யார் என்று பார்க்கலாம்.. […]
jupiter in gemini 05e261f20507831cab2a7e289f11a7a5 1

You May Like