fbpx

’இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு’..!! இந்த 4 மாவட்டங்களிலும் வெளுத்து வாங்கப்போகும் மழை..!!

தமிழ்நாட்டின் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக அடுத்த 3 மணி நேரத்தில் ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதோடு தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Chella

Next Post

’உடலுறவின்போது இந்த பொசிஷன் தான் பிடிக்கும்’..!! ’5 நிமிடத்திற்கு முன்பு இதை சாப்பிடுவேன்’..!! நடிகை கரீனா கபூர்

Mon Dec 11 , 2023
நடிகை கரீனா கபூர் கடந்த 1980ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்தவர். தற்போது 43 வயதாகும் இவர், சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சாய்ஃப் அலிகான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். கடந்த 2000ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் அறிமுகமான நடிகை கரீனா கபூர், வருடத்திற்கு ஐந்து முதல் எட்டு படங்கள் என பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். […]

You May Like