Breaking : விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்..! அதிமுகவின் அழைப்பு நிராகரிப்பு..!

Vijay 2025 1

தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த  தலைவர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. முதல் தீர்மானமாக கரூர் துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..


பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை கடற்படையால் கைதான தமிழக மீனவர்கள் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிராக தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம். டெல்டா மாவட்டங்களில் உரிய நேரத்தில் நெல் கொள்முதல் செய்யாத தமிழக அரசை கண்டித்து தவெக தீர்மானம் நிறைவேற்றியது.

அதே போல் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய்யை முன்மொழிந்து தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தலில் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்கியும் தீர்மானம் நிறைபெற்றப்பட்டது.. தவெக தலைமையில் கூட்டணி அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டது..

முன்னதாக அதிமுக பரப்புரையில் தவெக கொடி காட்டப்பட்டதற்கு, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது என்று இபிஎஸ் கூறியிருந்தார்.. இந்த நிலையில் விஜய் முதல்வர் வேட்பாளர் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அதிமுகவின் கூட்டணி அழைப்பை தவெக நிராகரித்துள்ளது..

RUPA

Next Post

கரூர் கூட்ட நெரிசல்.. திமுக அரசின் ஆழமான நிர்வாக நெருக்கடி அம்பலம்!

Wed Nov 5 , 2025
கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவம் சமீபத்திய தமிழ்நாட்டு வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஒருங்கிணைந்த, பாதுகாப்பான பொதுக்கூட்டமாக இருக்க வேண்டிய நிகழ்வு, அமைதியற்ற குழப்பமாக மாறி, பல அப்பாவி உயிர்களை காவு கொண்டது. இதனால் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையே தளர்ந்துள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்கள் இன்னும் நீதி கேட்டு வருகின்றன. அதேசமயம், ஆட்சியில் இருக்கும் திமுக மற்றும் விஜய்யின் தவெக இரண்டு கட்சிகளிடமும் மக்களின் […]
stalin vijay n

You May Like