இந்து மதப் பாரம்பரியத்தில், துளசி செடி மகாலட்சுமி தேவியின் அம்சமாக கருதப்பட்டு, பெரும்பாலான வீடுகளில் தினமும் வழிபடப்படுகிறது. எங்கே துளசி தொடர்ந்து வழிபடப்படுகிறதோ, அங்கே லட்சுமி தேவியின் வாசம் நிலைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை. துளசியை வழிபடுவதில் சில முக்கிய விதிகள் உள்ளதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஜோதிட நிபுணரான மஹந்த் சுவாமி காமேஸ்வரானந்த வேதாந்தாச்சார்யா கூறுகையில், துளசி இலைகளைப் போலவே அதன் பூக்களுக்கும் சிறப்பு முக்கியத்துவம் உண்டு என்கிறார். துளசிச் செடியில் முதல் தளிர்கள் அல்லது மொட்டுகள் தோன்றிய உடனேயே அவற்றைப் பறிக்கக் கூடாது. மொட்டுகள் மங்களகரமானதாகக் கருதப்படுவதால், அவை பழுப்பு நிறமாக மாறிய பிறகு மட்டுமே பறிக்க வேண்டும்.
துளசி செடியிலிருந்து இலைகளைப் பறிப்பதற்கென்று சில விதிகள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில் துளசி இலைகளை ஒருபோதும் பறிக்கக் கூடாது. இந்த நாட்களில் துளசியைப் பறிப்பது அசுபமாக கருதப்படுவதோடு, அது வீட்டின் அமைதியையும் மகிழ்ச்சியையும் குலைக்கும் என்றும் மஹந்த் தெரிவித்துள்ளார்.
மிகவும் அவசரமாகச் சென்று துளசி இலையைப் பறித்தால் அது துரதிர்ஷ்டத்தைத் தருவதோடு, வீட்டில் தேவையற்ற சண்டைகள் மற்றும் பிரச்சனைகளை அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், துளசி இலைகளைப் பறித்த பிறகு, அவை தவறுதலாக கூட ஒருவரது காலடியில் விழ அனுமதிக்கக் கூடாது. தரையில் விழுந்தாலோ அல்லது அதை மிதித்தாலோ, அது துளசி தேவியை அவமதிப்பதாக கருதப்படும்.
எனவே, துளசி இலைகளைப் பறிப்பதற்கு முன், துளசி மாதாவை கைகூப்பி வணங்கித் தியானித்து, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட பின்னரே இலைகளைப் பறிக்க வேண்டும். இவ்வாறு செய்வது எந்தப் பாவத்தையும் ஏற்படுத்தாது என்றும், மாறாக நல்ல பலன்களைத் தரும் என்றும் ஜோதிடர் மஹந்த் அறிவுறுத்தியுள்ளார்.
Read More : உலகக் கோப்பை மகளிர் சாம்பியன்களை சந்தித்த பிரதமர் மோடி!. மன உறுதிக்கு பாராட்டு!. வைரல் கிளிக்ஸ்!.



