பிலிப்பைன்ஸ் கால்மேகி புயல்!. பலி எண்ணிக்கை 114 ஆக உயர்வு!. 120க்கும் மேற்பட்டோர் மாயம்!. 7 லட்சம் மக்கள் பாதிப்பு!.

Typhoon Kalmaegi Philippine

மத்திய பிலிப்பைன்ஸில் கால்மேகி புயல் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பிலிப்பைன்ஸில் கடந்த சில நாட்களாக கால்மேகி என்று புயல் தாக்கியது. சூறாவளியால் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பிலிப்பைன்ஸின் பல பகுதிகளில் சாலை, மின்வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீட்பு பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அங்குள்ள பாலவான் தீவு அருகே கல்மேகி புயல் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 220 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளது. கனமழையால் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு குப்பைமேடு போல ஒன்றன் மேல் ஒன்றாகக் குவிந்துள்ளது.

இந்நிலையில், பிலிப்பைன்சை தாக்கிய கல்மேகி புயல் மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது. மேலும், மாயமான 120க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டு பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்டை மாகாணங்களான நீக்ரோஸ் ஆக்சிடென்டல் மற்றும் நீக்ரோஸ் ஓரியண்டல் ஆகியவற்றில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் சமூகங்கள் மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை பாதித்ததால் 62 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: சூப்பர் வாய்ப்பு..! அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக பணியாற்ற நேர்காணல்…!

KOKILA

Next Post

FLASH | கொட்டித் தீர்க்கும் கனமழை..!! திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு..!!

Thu Nov 6 , 2025
தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் தாக்கம் காரணமாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே திருப்பத்தூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர் இந்த விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக, இன்று காலை 10 மணி வரை தமிழகத்தில் 11 […]
Rain 2025 1

You May Like