விஷால், சந்தானம், சோனு சூட், அஞ்சலி, வரலட்சுமி, மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்டோர் நடிப்பில் 2012 ஆம் ஆண்டு உருவான மதகஜராஜா, சில காரணங்களால் 12 ஆண்டுகளுக்கு மேல் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், அனைத்து தடைகளையும் கடந்து உலகம் முழுவதும் கடந்த ஆண்டு இப்படம் வெளியானது.
இந்த திரைப்படத்தில் சந்தானம் அடிக்கும் காமெடிகளுக்கு திரையரங்கில் அவ்வளவு வரவேற்பு. கமர்ஷியல், காமெடி பார்முலாவை பக்காவாக பயன்படுத்திய சுந்தர் சியின் மதகஜராஜா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 12 ஆண்டுக்கு முன் எடுத்த படம் என்ற எண்ணத்தை எங்கேயும் ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் விஷால் அந்தப் படத்தில் பாடிய பாடல் குறித்து வரலட்சுமி அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த ஒரு பேட்டியில்,”அய்யோ விஷால் பாடிய அந்தப் பாடலை கோரியோகிராஃபி செய்தபோது எங்களுக்கு காதில் ரத்தமே வந்துவிட்டது. பிருந்தா மாஸ்டருக்கெல்லாம் அழுகையே வந்துவிட்டது.
மூன்று நாட்கள் தொடர்ந்து ஸ்பீக்கரில் அதே பாடலைத்தான் கேட்கும் நிலைமை இருந்தது. அதேசமயம் அந்தப் பாடல் ஒரு Funஆகதான் இருக்க வேண்டும் என்பதுதான் ஐடியா” என்றார். முன்னதாக விஷாலும் வரலட்சுமியும் காதலித்துவந்ததாக செய்திகள் பரவியது. நன்றாக சென்று கொண்டிருந்த இந்த காதல், சரத்குமார் மற்றும் விஷாலுக்கு இடையே நடிகர் சங்க தேர்தல் முரண்பாடு காரணமாக வரலட்சுமி சரத்குமார் உடனான காதல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
Read more: எந்த காரணமும் இல்லாமல் உடல் எடை குறையுதா? கவனம்.. இந்த புற்றுநோயாக கூட இருக்கலாம்..!



