Breaking : மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு..!

jewels new

ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.


அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. எனினும் கடந்த வாரத் தொடக்கத்தில் முன் தினம் ரூ.3,000 விலை குறைந்த நிலையில், பின்னர் மீண்டும் 3000 வரை உயர்ந்தது.. குறிப்பாக காலையில் குறைவதும் மாலையில் அதிரடியாக உயர்வதும் என தங்கம் விலை ஆட்டம் காட்டி வந்தது.. அந்த வகையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது..

இந்த நிலையில் சென்னையில் இன்று காலை மீண்டும் ஆபரணத் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தள்ளது.. அதன்படி, ஒரு கிராம் ரூ.70 உயர்ந்து ரூ. 11,250க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து தங்கம் விலை ரூ.90,000-க்கு விற்பனையானது..

இந்த சூழலில் இன்று மாலையும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.. அதன்படி, ஒரு கிராம் தங்கம் விலை ரூ.70 உயர்ந்து, ரூ.11,320க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ. 90,560க்கு விற்பனை செய்யப்படுகிறது… காலை ரூ.560, மாலையில் ரூ.560 என இன்று ஒரே நாளில் ரூ.1,120 உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

அதே போல் இன்று மாலையும் வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது… ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து ரூ.165க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ1,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால் வட்டி மட்டும் ரூ.32,000 கிடைக்கும்.. பெண்களுக்கான சூப்பர் சேமிப்பு திட்டம்..!!

RUPA

Next Post

சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் ரூ.11 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்.. ED அதிரடி.. எந்த வழக்கில் தெரியுமா?

Thu Nov 6 , 2025
சட்டவிரோத ஆன்லைன் பந்தய தளங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்கத்துறை (ED) முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் சிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான ரூ.11.14 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது. இந்த முடக்கப்பட்ட சொத்துகளில், ரெய்னா பெயரில் ரூ.6.64 கோடி மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மற்றும் தவானுக்குச் சொந்தமான ரூ.4.5 கோடி மதிப்பிலான நிலச் சொத்தும் அடங்கும். ED வெளியிட்ட அறிக்கையில், “இந்த […]
suresh raina shikhar dhawan

You May Like