வெள்ளிக்கிழமை முருகனை வழிபட்டால் வாழ்க்கை செழிக்கும்..!! இந்த ராசிக்காரர்கள் கட்டாயம் வழிபடுங்க..!!

Murugan 2025

பொதுவாக வெள்ளிக்கிழமை என்பது மங்களகரமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் கிரகங்களில் சுக்கிரனுக்கும், செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமிக்கும் உரிய நாளாகக் கருதப்படுகிறது. வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதும், விளக்கேற்றுவதும், கோ பூஜை செய்வதும் செல்வச் செழிப்பையும், மன நிம்மதியையும் தரும் என்பது பெரும்பாலானோரின் நம்பிக்கை. இந்தச் சக்தி வாய்ந்த நாள், அன்பையும் அருளையும் ஒருங்கே கொடுக்கும் நாளாகும்.


பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை அன்று ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வழிபட்டால் குடும்ப கஷ்டங்கள் நீங்கும் என்றும், குலதெய்வத்தை வழிபடவும் இது ஏற்ற நாள் என்றும் அறிவர். ஆனால், பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் என்னவென்றால், வெள்ளிக்கிழமை அன்று முருகப் பெருமானை மனதார வழிபட்டால், வெற்றிகள் குவியும். தெய்வீக அருள் கிடைக்கும் என்பதாகும்.

முருகனின் அருளைப் பெற வேண்டிய 4 ராசிகள் :

வெள்ளிக்கிழமை வழிபாடு முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்தது. குறிப்பாக, சில ராசிக்காரர்கள் தங்கள் ராசிக்குரிய வழிமுறையில் முருகனை வழிபட்டால், வாழ்வில் அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மிதுனம் : இந்த ராசியின் அதிபதியான புதனுக்கு நண்பராக இருப்பவர் முருகப் பெருமான். மிதுன ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை காலை வேளையில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்து, “ஓம் சரவண பவ” மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபட்டால், மன அழுத்தம் குறைந்து, மகிழ்ச்சி, புதிய வாய்ப்புகள், மற்றும் நல்ல மாற்றங்கள் தேடி வரும்.

கன்னி : கன்னி ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமைகளில் முருகனை வழிபடுவதன் மூலம், தங்கள் மனதில் இருக்கும் சந்தேகம், பயம் மற்றும் மனக்குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் இருந்து ஒரு பாடலையாவது வெள்ளிக்கிழமைகளில் வாசித்தால் மனம் லேசாகும் என்றும், விரைவில் நல்ல செய்திகள் வந்து சேரும் என்றும் நம்பப்படுகிறது.

தனுசு : தனுசு ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமையில் முருகனை வழிபட்டால், அவர்களின் வெற்றிக் கதவுகள் திறக்கும். அன்று சிவப்பு நிற மலர்கள் அல்லது சிவப்பு நிற வஸ்திரத்தை முருகனுக்குச் சாற்றி வழிபட்டால், கல்வியில் உள்ள தடைகள், போட்டி தேர்வுகளில் வெற்றி, வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவை மிக சிறப்பாக அமையும்.

மீனம் : மீனம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை மாலை வேளையில் முருகனின் படம் அல்லது சிலைக்கு முன் விளக்கு ஏற்றி வைத்து, குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது “சரவண பவ” மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்தால், மன அமைதி, ஆன்மீக சக்தி மற்றும் குடும்ப ஒற்றுமை ஆகியவை ஏற்படும் என்று ஆன்மீக பெரியவர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக, வெள்ளிக்கிழமை அன்று உங்களுக்குப் பிரியமான திருப்பரங்குன்றம் முருகன் அல்லது அருகில் உள்ள எந்த முருகன் ஆலயத்திலும், அல்லது உங்கள் வீட்டிலேயே முருகனை மனதார வழிபட்டால், வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை கண்கூடாக காண முடியும். நம்பிக்கையுடன், விளக்கேற்றி, சிவப்பு மலர்கள் மற்றும் பால் நைவேத்தியம் படைத்து, ஓம் சரவண பவ மந்திரம் அல்லது கந்த சஷ்டி கவசம் படித்தால், முருகனின் அருள் மிக விரைவில் கிடைத்து வாழ்வு செழிக்கும் என்பது ஐதீகம்.

Read More : வெள்ளிக்கிழமை இந்த முறையில் லட்சுமி தேவியை வழிபடுங்கள்!. வீட்டில் மகிழ்ச்சி, செல்வம் கொட்டும்!.

CHELLA

Next Post

தண்ணீர் லாரி மீது மோதிய அரசுப் பேருந்து..!! அப்பளம்போல் நொறுங்கியதில் ஓட்டுநர் உட்பட இருவர் உடல் நசுங்கி பலி..!!

Fri Nov 7 , 2025
மதுரை – தூத்துக்குடி தேசிய 4 வழிச்சாலையில் நேற்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில், 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுரையில் இருந்து நேற்று மதியம் 2.35 மணியளவில் திருச்செந்தூர் நோக்கி 25 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த குளிர்சாதன அரசுப் பேருந்தானது, மாலை 4.30 மணியளவில் எட்டயபுரம் அருகே சிந்தலக்கரை சமத்துவபுரம் பகுதியில் வந்துள்ளது. பேருந்தை மதுரை பேரையூரைச் சேர்ந்த நல்லுசாமி (45) ஓட்டி வந்துள்ளார். பரமக்குடியைச் சேர்ந்த ஜெயராமன் (47) […]
Accident 2025 2

You May Like