சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் திமுக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ நெருக்கடி காலத்தில் அன்றைக்கு பல கொடுமைகளை சட்டமாக இயற்றி வைத்தார்கள்.. ஜனநாயகத்தை காக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பவர்கள் திமுகவினர்.. நெருக்கடி காலத்தில் திமுகவில் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை நெருக்கடிக்கு உள்ளானார்கள்.. திமுகவை அழித்துவிடலாம் என யார் யாரோ புறப்பட்டு உள்ளனர்.. எந்த கொம்பனாலும் திமுகவை அழிக்க முடியாது.. யாரும் திமுகவை எந்த காலத்திலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது..
SIR என்று சொல்லப்படக் கூடிய சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளது.. இதை எதிர்த்து தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி உச்சநீதிமன்றம் வரை சென்றிருக்கிறோம்.. வழக்கு நடந்து கொண்டிருக்கிறது..
சட்டப்போராட்டம் ஒருபக்கம் நடந்தாலும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகிறது. வரும் 11-ம் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம்.. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை திமுகவினர் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.. தமிழ்நாட்டில் ஜனநாயகத்தை காக்கும் காவலர்களாக திமுகவினர் இருக்க வேண்டும்.. ” என்று தெரிவித்தார்..
Read More : Flash : ஹேப்பி நியூஸ்.. இன்று சரசரவென குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?



